Waiting Is Over.. தட்டி தூக்க போகுது தாம்பரம் ஸ்டேசன்! புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

  • சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 9 மின் தூக்கிகள், 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை வரும் நவம்பர் அல்லது டிசம்பர் 2026 மாதங்களுக்குள் படிப்படியாக முடித்து, பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    சென்னையின் முக்கியமான புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நடைமேடைகளுக்குச் செல்வதற்கும், ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுக்குச் செல்வதற்கும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    Advertisement

    தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் வழியாக நடைமேடைகள் மற்றும் நுழைவு, வெளியேறும் பகுதிகளை இணைக்கும் வகையில் 9 புதிய மின் தூக்கிகள் அமைக்கப்படுகின்றன. மேற்கு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 2 மின் தூக்கிகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன.

    200 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.. அவசர அவசரமாக தரையிறக்கம்

    அவற்றுக்கான உரிய உரிமச் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன. மின் தூக்கிகளைச் சென்றடைவதற்கான நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளன. இதுதவிர, நடைமேடைகள் 1 மற்றும் 2, 3 மற்றும் 4, 9 மற்றும் 10 ஆகியவற்றில் தலா ஒரு மின் தூக்கியும், கிழக்கு நுழைவு வாயிலில் 2 மின் தூக்கிகளும் என மொத்தம் 5 மின் தூக்கிகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவை சட்டப்பூர்வ ஆய்வு மற்றும் உரிமம் பெறுவதற்காகக் காத்திருக்கின்றன.

    Advertisement
    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்.. ஜோதிடர் சொன்ன நண்டு ராசி? குழப்பத்தில் முதல்வர் விஜய்!

    மேலும், நடைமேடைகள் 5 மற்றும் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் தலா ஒரு மின் தூக்கி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு மின் தூக்கிகளையும் நவம்பர் 2026 இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நடைமேடைகளுக்கும் நடை மேம்பாலங்களுக்கும் எளிதாகச் சென்று வருவதற்காக 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் பணியிடங்களுக்கு வந்தடைந்துள்ளன.

    தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது.. ஒவ்வொருத்தர் அக்கவுண்டுக்கும் ரூ.2000 வரப் போகுது! லீக்கான நியூஸ்!
    Advertisement

    மேற்கு நுழைவு வாயிலில் 2 நகரும் படிக்கட்டுகள், நடைமேடைகள் 3 மற்றும் 4-ஐ இணைக்கும் வகையில் 2 படிக்கட்டுகள், நடைமேடைகள் 9 மற்றும் 10-ஐ இணைக்கும் வகையில் ஒரு படிக்கட்டு என மொத்தம் 5 நகரும் படிக்கட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை நவம்பர் 2026 மத்தியில் பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

    நடைமேடைகள் 1 மற்றும் 2-ஐ இணைக்கும் வகையில் ஒரு படிக்கட்டு, நடைமேடைகள் 5 மற்றும் 6-ஐ இணைக்கும் வகையில் ஒரு படிக்கட்டு, க்ழக்கு நுழைவு வாயிலில் ஒரு படிக்கட்டு, நடைமேடைகள் 7 மற்றும் 8-ஐ இணைக்கும் வகையில் 2 படிக்கட்டுகள் ஆகிய இந்தப் பணிகளை டிசம்பர் 2026 இறுதிக்குள் முடித்து, பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வசதிகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்தவுடன், தாம்பரம் ரயில் நிலையத்தில் மொத்தம் 10 மின் தூக்கிகளும், 16 நகரும் படிக்கட்டுகளும் பயன்பாட்டில் இருக்கும்.

    Advertisement

    இந்த வசதிகள் மூலம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அதிக உடைமைகளுடன் பயணம் செய்வோர் எளிதாக நடைமேடைகளுக்குச் செல்ல முடியும். குறிப்பாக, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதில் சிரமம் உள்ள பயணிகளுக்கு இந்த வசதிகள் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலைக் குறைக்கவும், நடைமேடைகள் மற்றும் நுழைவு, வெளியேறும் பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.

    தற்போதைய திட்டத்தின்படி, ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளில் 5, நவம்பர் 2026 மத்தியில் பயன்பாட்டுக்கு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மின் தூக்கிகளில் எஞ்சியுள்ள 2, நவம்பர் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 நகரும் படிக்கட்டுகள் டிசம்பர் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் நவம்பர் முதல் டிசம்பர் 2026 வரை கட்டம் கட்டமாகப் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Tambaram railway station’s new lifts and escalators are expected to open in phases from November to December 2026, improving passenger convenience.