சென்னை: 'தேனிசைத் தென்றல்' என இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா தனது 76 வயதில் இன்று காலமானார். கானா பாடல்களால் புகழ் பெற்றாலும் தேனிசை பாடல்களால் ரசிகர்கள் இதயத்தை நனைத்த தேனிசை தென்றல் தேவா, இளையராஜா - ஏஆர் ரகுமான் என அக்காலத்தில் பிரபல இசையமைப்பாளர்களைத் தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான இசை முத்திரை பதித்தவர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
சென்னை பெற்றெடுத்த இசை சிகரங்களில் முக்கியமானவர் தேவா. மயிலாப்பூரில் பிறந்த இவர் தனது சகோதரர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். சந்திர போஸ், சபேஷ், முரளி உடன் அப்போதைக்கு சென்னையில் மிகப் பிரபலமான குழுவாக இவர்களது குழு இருந்தது.
மாட்டுக்கார மன்னர் என்ற படத்தின் மூலம் 1986 இல் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தேவா. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இன்று வரை இசையமைத்திருக்கிறார். நடிகர் பிரசாந்த் நடித்த வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் இசையமைத்தாலும் 'இந்து' திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிரபுதேவா - ரோஜா நடித்த அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். கல்லூரி விழாக்களில் கொடி கட்டு பறந்தன அவரது பாடல்கள். அதற்குப் பிறகு ஆயிரக்கணக்கான பாடல்களை இசை அமைத்திருக்கிறார். கானா பாடல்களால் 'கானா இசை அரசன்' என பிரபலமானாலும் மனதை வருடும் தேனிசை பாடல்களை கொடுத்து வெற்றி கண்டவர். அதனால் தான் ரசிகர்கள் அவரை 'தேனிசைத் தென்றல் தேவா' என அழைத்தனர்/ தூதுவளை இலை அரைச்சு. ஆடியில செய்தி சொல்லி. மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் என தேவாவின் தேனிசை பாடல்கள் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்/ மேலும் கவலைப்படாதே சகோதரா. சலோமியா. மீனாட்சி மீனாட்சி உள்ளிட்ட பல கானா பாடல்களை இசையமைத்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர். எல்லாவற்றையும் விட ரஜினிகாந்த் தற்போது வரை பயன்படுத்தி வரும் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு தேவாவின் இசையில் உருவானது. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் ஹிட படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. 1990களில் ஒரு பெரும் இசை சகாப்தத்தை தனியெ உருவாக்கியவர். 'ஃபாதர் ஆஃப் கானா' என ரசிகர்களால் தற்போதும் அழைக்கப்படுகிறார் தேவா. 1980 கால கட்டங்களில் இளையராஜா தனி இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தார். 90களில் ஏஆர் ரகுமானின் வருகை டிஜிட்டல் இசையை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தது. இளையராஜாவின் இசையில் இருந்து, ஏ ஆர் ரகுமான் இசை வேறுபாடு காட்டியது. ஆனால் இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் இணையாக பல பாடல்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர். சொல்லப்போனால் 'தூதுவளை இல அரைச்சு' உள்ளிட்ட பல பாடல்களை இளையராஜா தான் இசையமைத்தார் என தற்போது வரை நம்பும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அதை குறிப்பிட்டு தான் 'லப்பர் பந்து' படத்தில் இது தேவா பாட்டு சார் என ஒரு வசனம் வரும். அந்த அளவுக்கு இளையராஜாவுக்கு இணையாக பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். சமீபத்தில் கூட மீசைய முறுக்கு 2 படத்தில் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார் தேவா. தனது சகோதரர்கள் மட்டுமல்லாது தனது சகோதரர்களின் மகன்களையும் ஒரே குடும்பத்தில் வைத்து வளர்த்து இசை உலகில் அறிமுகப்படுத்தியவர். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளராக உள்ளார். மேலும் அவரது சகோதரரின் மகன் தான் நடிகர் ஜெய் என்பதும் குறிப்பிடத்தக்கது.தேனிசைத் தென்றல் தேவா
கானா இசை அரசன்
ஃபாதர் ஆஃப் கானா
இளையராஜா
ஹிட் பாடல்கள்
ஸ்ரீகாந்த் தேவா