விஜய்யை 6 நிமிடமாக புகழ்ந்த வினோத்! போதும் போதும்! பட்ஜெட்டுக்கு வாங்க! குறுக்கே வந்த சபாநாயகர்

  • சென்னை: தமிழக சட்டசபையில் கோட் சூட் போட்ட விவசாயி, பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன் என்றெல்லாம் புகழ்ந்து பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், பட்ஜெட்டை மட்டும் படிக்குமாறு அறிவுறுத்தினார்.

    Advertisement

    2026- 2027-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அப்போது அவர் பச்சை நிற தசுண்டு அணிந்து கொண்டு பட்ஜெட்டை வாசித்தார்.

    பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்வதாக கூறிய வினோத், திடீரென முதல்வர் விஜய்யை புகழ் தொடங்கினார். கோட் சூட் போட்ட விவசாயி, பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன், விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது. முதலமைச்சர் விஜய் பேசுவதே தலைப்புச் செய்தி அல்லது அவரை பற்றி பேசுவது தான் தலைப்புச் செய்தி.

    விவசாயிகள் வெற்றி பெறாவிட்டால் வெற்றி தமிழகத்தை நாம் காண முடியாது, வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் பயணிக்க முடியாது என விஜய் அறிவுரை கூறினார்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் அடுத்த பிறவியில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்றார், ஆனால் இப்போதே ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் மகனாக உள்ளார் முதலமைச்சர் விஜய் என புகழ்ந்து கொண்டே இருந்தார்.

    அப்போது திமுக எம்எல்ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், வேளாண் துறை அமைச்சர் பட்ஜெட்டில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் வாசியுங்கள்" என்றார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை விஜய்யை புகழ்ந்த அமைச்சர், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மேலும் அவர் தனது உரையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள், ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை பெற்று நிதிநிலை அறிக்கை தயாரித்திருக்கிறோம். முதல்வர் வகுத்து கொடுத்த சீரிய தொலைநோக்கு திட்டங்களுடன் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

    Advertisement

    மண்ணின் வளத்தை பாதுகாக்க தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ 122 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகிக்க மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ 34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உயிர்ம உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு. உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண் வள அட்டை கொடுக்கப்படும்.

    Advertisement

    மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    மழை வெயிலிருந்து விளை பொருட்களை பாதுகாக்க 43,500 தார்பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சாமை, தினை, வரகு, குதிரை வாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும். இதற்கு ரூ 7.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வினோத் தெரிவித்தார்.

    English Summary

    Minister Vinoth was stopped by Speaker JCD Prabhakar as he praises Vijay for 6 minutes in his budget speech as it was opposed by DMK MLAs.