பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக சிவஞானம் ஐஏஎஸ் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு!

  • சென்னை: தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக சிவஞானம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வகித்த ஐஏஎஸ் அதிகாரி சிவஞானத்தை தற்போது பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக தமிழக அரசு நியமித்துள்ளது.

    Advertisement

    2010 தமிழ்நாடுu கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சிவஞானம், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், சிவஞானம் ஐஏஎஸ்-ஸை பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    அதற்கு முன்னதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், தேர்தல் சமயத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின் போதும் இணை தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல, மத்திய அரசு பணியில் இருந்து தமிழ்நாடு பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 1992 ஆம் ஆண்டு பிரிவு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழக அரசு பணியில் இருந்து மத்திய அரசு பணிக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மின்சார வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தார்.

    English Summary

    IAS officer Sivagnanam has been appointed as the Commissioner of the Disaster Management Department by the Tamil Nadu government. He previously served as the Additional Chief Electoral Officer of Tamil Nadu.