Tasmac Party Fund: மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொட்டவர்களை விட மாட்டோம்! எச்சரித்த விஜய்

  • சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், மக்கள் பணத்தை தொட்டவர்களை விட மாட்டோம் என எச்சரித்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் என் மனதில் ஆறாத வடுவாக, பெரும் வேதனையாக இருக்கிறது. மக்களைச் சந்திப்பதில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளும், பாதுகாப்பின்மையும் இருந்த சூழலில், கரூர் சம்பவத்தை வைத்து எங்கள் மீது பழி போட்ட கொடுமை எல்லாம் வேற லெவல்" என்று சாடினார்.

    Advertisement

    எங்கள் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாரும் புதியவர்கள் தான். எங்களுக்கு மக்கள் சேவை செய்ய மட்டும்தான் தெரியுமே தவிர, மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது. கோயில் பணத்தையோ, கனிம வளங்களையோ கொள்ளையடிக்க எங்களுக்குத் தெரியாது. நமக்கு எதிராக நாம் எதிர்பாராத நபர்கள் எல்லாம் தற்போது ஒன்று சேருகிறார்கள்.

    டந்த ஆட்சியில் காவல் துறையைத் தன் வசம் வைத்திருந்த முன்னாள் முதல்வர், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். கடந்த 10 மாதங்களாகத் தமிழகத்தில் முழுநேர சட்டம் ஒழுங்கு டிஜிபி-யே நியமிக்கப்படவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தகுதியான டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கெட போதைப்பொருட்கள்தான் முக்கியக் காரணம்.

    Advertisement

    டாஸ்மாக் மூலம் கட்சி நிதி வாங்கித்தான் கடந்த காலத்தில் ஆட்சி நடத்தினார்கள். அதை நாங்கள் இப்போது அதிகாரத்திற்கு வந்ததும் அதிரடியாக நிறுத்தியிருக்கிறோம் என விஜய் சொன்னதும் திமுகவினர் கொந்தளித்து பதில் கொடுக்க அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    அமைச்சர் ஆதவ் விளக்கம் அளிக்கையில் முதல்வர் பேசவில்லை பேசவில்லை என்கிறார்கள். பேசத் தொடங்கியதுமே அஞ்சுகிறார்கள். கட்சி நிதி என்றுதான் முதல்வர் சொன்னார், எந்த கட்சி என சொன்னாரா என்றும் ஆதவ் கேள்வி எழுப்பினார்.

    அப்போது திமுக எம்எல்ஏக்கள் சிலர் ஒருமையில் பேசியதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டினார். அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

    Advertisement

    இதையடுத்து விஜய் தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை. மக்கள் பணத்தை தொடமாட்டோம். தொடவிட மாட்டோம். மக்கள் பணத்தை தொட்டவர்களை விடமாட்டோம் என்றார் விஜய்.

    English Summary

    Tamil Nadu Assembly: Speaking during the debate on the Governor’s address, CM Vijay warned that those who misuse or touch public money will not be spared.