அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன வார்த்தை.. இப்படி எல்லாம் பேசக்கூடாது.. கடும் கோபத்தில் சபாநாயகர்

  • சென்னை: சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தபோது, திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன ஒரு வார்த்தை, சபாநாயகரையும் கோபப்படுத்தியது. இதுபோல எல்லாம் பேசக்கூடாது.. ஆளும் கட்சியாக இருப்பதால் நாம் பொறுப்புடன் இருக்க வேண்டும் என அமைச்சரை கடிந்து கொண்டார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதங்களும் நடந்தது. நேற்றைய தினம் முதல்வர் விஜய்யும் கூட சட்டசபையில் பேசியிருந்தார். அப்போது அவர் மிசா, சர்க்காரியா கமிஷன் எ னபல விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

    Advertisement

    திமுக எம்எல்ஏக்கள்

    இன்றைய தினமும் கூட அந்த சர்ச்சை தொடர்ந்தது. முதலில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மிசா தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைது செய்யப்படவில்லை என்பது போன்ற கருத்தை அவர் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், தங்களது கண்டனத்தை தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    நிர்மல் குமார் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், சபாநாயகர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச ஆரம்பித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

    Advertisement

    ஆதவ் சொன்ன வார்த்தை

    இதனால் அவையில் தொடர்ந்து கூச்சல் நிலவியது. இருப்பினும், அவை தலைவர், ஆதவ் அர்ஜுனாவை தொடர்ந்து பேசுமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சர் பேசும்போது மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றும் ஒருவர் பேசும்போது தொடர்ந்து சத்தம் போடக்கூடாது என்றும் உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், திமுகவினர் தொடர்ந்து கோஷமிட்டனர்.

    இதனால் கோபமடைந்த ஆதவ் அர்ஜுனா, "நாம் பேசும்போது அவர்கள் கேட்க வேண்டும்.. அவர்கள் பேசும்போது நாம் கேட்க வேண்டும்.. நாங்கள் பேசுவதை முதலில் கேளுங்கள்" என்றார். இருப்பினும் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் கடுப்பான ஆதவ் அர்ஜுனா, "நாங்கள் எழுந்து நின்றால் என்ன நடக்கும்" என்று கூறினார்.

    Advertisement

    கோபமடைந்த சபாநாயகர்

    இதைக் கேட்டவுடன் கோபமடைந்த சபாநாயகர், "நோ.. நோ... நோ.. இதுபோல எல்லாம் பேசக்கூடாது. எதிர்க்கட்சியை விட நமக்கு தான் கூடுதல் பொறுப்புகள் இருக்கிறது. பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். நேற்று முதல்வர் பேசும்போது தவெக எம்எல்ஏக்கள் எப்படி அமைதி காத்தார்களோ.. அதேபோல இன்றும் அமைதி காக்க வேண்டும். இங்கு நடப்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் முடிவு செய்வார்கள்" என்று அவர் கூறியிருந்தார்.

    அடுத்து என்ன நடந்தது

    இதையடுத்து கே. என். நேரு பேச மட்டும் சபாநாயகர் அனுமதி கொடுத்தார். அப்போது பேசிய கே என் நேரு முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவையில் இல்லாத ஒருவரை பற்றி முதல்வரே பேசுவதில் என்ன நியாயம்.. இதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அது குறித்து தான் பின்னர் முடிவை அறிவிப்பதாக கூறிய சபாநாயகர், ஆதவ் அர்ஜுனாவை தொடர்ந்து பேசுமாறு சொன்னார். இதையடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையை தொடர்ந்தார்.

    English Summary

    Tamil Nadu Assembly Speaker rebuked Public Works Minister Aadhav Arjuna after his remarks during a noisy protest by DMK MLAs(ஆதவ் அர்ஜுனா பேச்சால் கோபடைந்த சபாநாயகர்): Speaker not happy on what minister Aadhav Arjuna said.