எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சினு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு நன்றி! விஜய் அதிரடி


  • சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் விஜய், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய விஜய், எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சினு நினைத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி என தெரிவித்தார்.

    Advertisement

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் முதல் நாள் ஆளுநர் உரையாற்றினார். அப்போது 3 ஆண்டுகள் கழித்து தமிழக சட்டசபையில் உரையை ஆளுநர் முழுமையாக படித்தார்.

    Advertisement

    அப்போது தவெக அரசு எழுதி கொடுத்த ஒரு வார்த்தையை கூட விடாமல் அவர் படித்தது, பலரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. இதையடுத்து 19, 22, 23 ஆகிய நாட்களுக்கு செயல்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் , அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார்.

    அந்த வகையில் 19ஆம் தேதி முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, குதிரை பேரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    Advertisement

    குதிரை பேரம், கழுதை பேரம் என ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என சபாநாயகர் கண்டித்ததை அடுத்து 3 சீட்டர் சோஃபா, 5 சீட்டர் சோஃபாவாக மாறியது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் மேட்டூர் அணை தண்ணீர் திறப்பது குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது இனிய சொல்லால் பதிலளிக்கும் மன்னனை குறிக்கும் திருக்குறளை வாசித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். இதையடுத்து முன்னாள் உறுப்பினர்கள் சின்னசாமி, வி.எஸ்.காளிமுத்து ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து ஆளுநர் உரையில் எம்எல்ஏக்கள் கொடுத்த திருத்தங்கள் சட்டசபையில் ஏற்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு விஜய் பதிலளித்தார்.

    விஜய் கூறுகையில், தவெகவை தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பிய மக்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்க வாய்ப்பளித்த சபாநாயகருக்கு நன்றி! எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சினு நினைத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி!

    நான் ஏதோ சூட்டிங்கில் இருந்து நேராக வந்து சிஎம் ஆனதாக பலர் கருதுகிறார்கள். ஈழத்தமிழர்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தேன். 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தோம். சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

    Advertisement

    ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். எல்லாரும் கட்சியை ஆரம்பித்த பிறகுதான் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்வார்கள். ஆனால் நாம் ஒவ்வொரு வீட்டிற்குள் சென்றுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளோம். நடிகந் கட்சி என நக்கல், நையாண்டினு கிண்டல் செய்கிறார்கள்.

    சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 1.72 கோடி வாக்குகளை பெற்றோம். 35 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளோம். ஏதோ எளிதாக ஜெயித்து ஆட்சிக்கு வந்ததாக சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

    English Summary

    Tamil Nadu Assembly Session: CM Vijay is set to speak on the Governor’s address and is expected to respond to allegations raised by Opposition Leader Udhayanidhi.