சட்ட ஒழுங்கு, நிதி சிக்கல்.. இரண்டிற்குமே முந்தைய அரசு தான் காரணம்.. ஆளுநர் உரையில் இருந்த பாயிண்டு

  • சென்னை: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்குப் போதைப் பொருள் நடமாட்டமே காரணம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டு இருந்தது. மேலும், போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க முந்தைய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதுவே நிலைமை இந்தளவுக்கு மோசமாக மாற காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு சட்டசபையில் 17வது கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளாகவே ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் கிளம்பிய நிலையில், இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆளுநர் தனக்கான உரையை முழுமையாக வாசித்தார்

    Advertisement

    ஆளுநர் உரை

    ஆளுநர் உரையில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்று இருந்தது. மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது. நெடுஞ்சாலை கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும் மத்திய அரசை முதல்வர் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பல்வேறு திட்டங்களில் தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை ஒதுக்கவும் மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நிதி பகிர்வில் தமிழக அரசுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    நிதி நிலைமை

    மேலும், தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆளுநர், நிதி நிலை கடந்த 5 ஆண்டுகளில் மிக மோசமான நிலைக்குப் போய் இருப்பதாகவும் கடன் அளவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரம் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்பதும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    Advertisement

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் தவறு செய்வோர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் படை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டு இருந்தது.

    போதைப் பொருள்

    ஆளுநர் உரையில் மேலும், "கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க முந்தைய அரசுகள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்குப் போதைப்பொருளே முக்கிய காரணமாக இருக்கிறது. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டம் தோறும் போதைப் பொருளை ஒழிக்கத் தனி யூனிட்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    போதைப் பொருட்களை ஒழிக்க இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் நலன் கருதி, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன" என்றார்.

    English Summary

    In the 17th Tamil Nadu Assembly session, the Governor delivered his full speech(தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை): Tamil Nadu Assembly Session Governor Address latest news in tamil.