சட்டசபை நேரலைக்கு வெட்டு.. இனி அவைக்குறிப்பில் நீக்கும் வார்த்தை வெளிவராது.. சபாநாயகர் முடிவு!

  • சென்னை: சட்டசபையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகள் ரீல்ஸாக மாறுவதை தடுக்க ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சட்டசபை நேரடி ஒளிபரப்பை சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்ப ஆலோசனை நடந்திருக்கிறது. இதன் மூலமாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை எளிதாக சட்டசபை ஒளிபரப்புக் குழு மூலம் நீக்க முடியும் என்றும் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தவெக ஆட்சிக்கு வந்த பின் சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பொதுமக்களிடையே சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான விவாதம் அதிகரித்தது. தங்கள் தொகுதி எம்எல்ஏ-க்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை பேசுகிறார்களா? முக்கிய பிரச்சனைகளில் சட்டசபையில் அரசு அளிக்கும் விளக்கம் உள்ளிட்டவை குறித்து மக்களின் பார்வை திரும்பி இருக்கிறது.

    Advertisement

    இருப்பினும் திமுக தொடர்பாக தொடர்ச்சியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவெக சட்டசபையில் கூறி வந்தது. அமைச்சர் மரிய வில்சன் கல்வித்துறையில் நானே லஞ்சம் கொடுத்துள்ளேன் என்று பேசியது, அமைச்சர் ரமேஷ் அறநிலையத்துறை தொடர்பாக வைத்த குற்றச்சாட்டுகள், ஆதவ் அர்ஜுனாவின் ஏராளமான பேச்சுகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசிய வார்த்தைகள் சட்டசபையில் தொடர்ந்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு வந்தது. அவ்வாறு அவைக்குறிப்பில் இருந்து வார்த்தைகள் நீக்கப்பட்டாலும், அமைச்சர்கள் அப்படியான வார்த்தைகளை பேசுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அவைக்குறிப்பில் இருந்து வார்த்தைகளை நீக்குவதை அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    Advertisement

    தொடர்ந்து அவர்கள் பேசிய வார்த்தைகள் நேரலையில் ஒளிபரப்பாகி சோசியல் மீடியாவிலும் ரீல்ஸாக வெளியாகியது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் முறையிட்டார். அப்போது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை ஒளிபரப்பக் கூடாது என்றும், சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

    இருப்பினும் அவைக்குறிப்பில் நீக்கப்படும் வார்த்தைகள் நேரலையில் ஒளிபரப்பாவதை தடுக்க முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. சட்டசபையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகள் ரீல்ஸாக மாறுவதை தடுக்க ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    Advertisement

    சட்டசபை நேரடி ஒளிபரப்பை சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்ப அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக சட்டசபையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை ஒளிபரப்பாமல் தவிர்க்க முடியும். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை சட்டசபை நேரலை ஒளிபரப்புக் குழுவே கட் செய்துவிட முடியும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu Assembly: Tamil Nadu Assembly Plans Delayed Live Telecast to Filter Out Expunged Remarks