தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு!

  • சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தொடங்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    அதிமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். அந்த 4 தொகுதிகளும், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    Advertisement

    திருச்சி கிழக்கு

    தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இரண்டு தொகுதிகளில் (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு) போட்டியிட்டு வெற்றி பெற்றதால், பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கை ராஜினாமா செய்தார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    மதுராந்தகம்

    மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    பெருந்துறை

    பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ். ஜெயக்குமார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    Advertisement

    தாராபுரம்

    தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பி. சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    அம்பாசமுத்திரம்

    அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் அந்த 4 தொகுதிகளும், தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் 5 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டன.

    Advertisement

    விரைவில் இடைத்தேர்தல்

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது இந்த 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (RO) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ARO) நியமிக்கப்பட்டு, வாக்குச்சாவடி உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வரும் 22ஆம் தேதிக்குள் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    English Summary

    State Chief Electoral Officer Archana Patnaik has instructed District Election Officers to commence preparations for holding by-elections in the 5 vacant Assembly constituencies in Tamil Nadu. Returning Officers and Assistant Returning Officers have been appointed for all five constituencies where the by-elections are to be held.