நான் முதலில் தமிழன்.. பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க

  • சென்னை: இன்று தனது புதிய இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை, தான் தமிழன் என்று பேசியிருக்கிறார். அவர் வரும் காலங்களில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளில்.. அவர் பாஜகவிற்கு எதிராகத் தனது குரலை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்கள் அவரை பாஜகவின் மற்றொரு முகமாகவே கருதுவார்கள்.

    Advertisement

    தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே ஹாட் டாபிக்காக இருந்தது அண்ணாமலையின் பாஜக வெளியேற்றம் தான். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். பாஜகவில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே தனது சமூக வலைத்தளம் வழியாகப் பேசிய அண்ணாமலை, பல விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார்.

    Advertisement

    பாஜகக்காரனா அல்லது தமிழனா!

    அதில் அவர், "நான் ஒரு பாஜகக்காரனா அல்லது தமிழனா என்ற முரண்பாடு எனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்தது. நான் விலகப் போகும் முடிவைக் கடந்த 2025 டிசம்பர் 4ம் தேதியே கட்சியிடம் சொல்லிவிட்டேன். ஆனால், தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து, அதன் பிறகு செல்லும்படி கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது" என்றார். மேலும், கடந்த 18 மாதங்களாகக் கட்சியின் சில செயல்பாடுகளில் தனக்கு இருந்த அதிருப்தியையும் அவர் ஓப்பனாகப் பதிவு செய்துள்ளார். பாஜகவில் இருந்தபோதும் தான் ஒருபோதும் தமிழன் என்ற அடையாளத்தைச் சமரசம் செய்து கொண்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    Advertisement

    இந்த ராஜினாமாவிற்குப் பின்னால் டெல்லியில் மிகப் பெரிய அரசியல் டிராமாவே நடந்து முடிந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோரைச் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவித்துவிட்டு, சென்னை திரும்புவதற்காக டெல்லி ஏர்போர்ட்டிற்குப் புறப்பட்டுள்ளார்.

    திடீரென வந்த அழைப்பு

    ஆனால், அண்ணாமலை ஏர்போர்ட் சென்று கொண்டிருந்தபோதே, முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாஜக மத்தியத் தலைமை அவரை அவசரமாகத் திரும்ப அழைத்துள்ளது. அவரை சமாதானப்படுத்த டெல்லி தலைவர்கள் எவ்வளவோ முயன்றும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

    Advertisement

    அண்ணாமலை கட்சித் தலைமையிடம் இரண்டு அதிரடி ஆப்ஷன்களை முன்வைத்ததாகத் தெரிகிறது. தன்னை மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவராக்க வேண்டும்.. அதுமட்டுமில்லாமல், குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கு முழுமையான தன்னாட்சியும், அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், தன்னைத் தனி அரசியல் பாதையை நோக்கிப் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

    அண்ணாமலை யோசனை

    தமிழகத்தில் ஒரு தேசிய கட்சி உருவெடுத்துத் தனித்து ஆதிக்கம் செலுத்துவதற்கான சூழல் இப்போதைக்குக் குறைவாகவே இருப்பதாக அண்ணாமலை கருதுகிறார். அதனால், தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய பிராந்தியக் கட்சி ஒன்றைத் தொடங்குவதே அவரது திட்டம்!

    Advertisement

    மேலும், அரசியலில் தூய்மை இருக்க வேண்டும் என்றும், சோஷியல் மீடியாக்களில் தனி நபர் அவதூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். புதிய தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், இதற்காக ஒரு தனி இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். இந்தத் தளத்தில் இணையும் புதிய இளைஞர்களுக்கு முறையான அரசியல் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    திட்டம் என்ன

    சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இருதரப்புமே பெரும் சரிவைச் சந்தித்தன. அதே நேரத்தில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பாராத மாபெரும் வெற்றியைப் பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது.

    Advertisement

    இந்த அதிரடி அரசியல் மாற்றங்களுக்குப் பிறகுதான், அண்ணாமலையும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய பிராந்தியக் கட்சியைத் தொடங்கினால் தமிழகத்தில் சாதிக்க முடியும் என்ற கணக்கோடு களமிறங்கியுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையின் இந்தத் தனிப்பாதை நகர்வு, தமிழக அரசியலில் என்ன செய்யும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Following his official resignation from the BJP, Annamalai announced his new political movement in Tamil Nadu(பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலையின் அடுத்த திட்டம்): Annamalai Quits BJP latest news in tamil.