CJP போராட்டத்தில் ராகுலுக்கு என்ன வேலை? இன்று தமிழக காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை! நயினார் அறிவிப்பு

  • சென்னை: ராகுல் காந்தியை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்கள் இன்று முற்றுகையிடப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு தேசபக்தி கொண்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    Advertisement

    நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் கடந்த 20ஆம் தேதி பேரணி நடைபெற்றது.

    Advertisement

    அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேரணியில் ஈடுபட்டவர்கள் போலீஸார் மீது கற்களை வீசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

    இதில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமநையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் அமளி நடந்தது.

    இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு கொடுத்தார். அவரும் மாணவர்களுடன் அமர்ந்து போராடினார். ஆனால் போலீஸார் அவரை கலைந்து போக எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அவர் தொடர் போராட்டம் நடத்தி வந்ததால் அவரை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

    Advertisement

    இதில் ராகுல்காந்திக்கு காயமேற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: 2, 3 கோடி கொடுத்து மருத்துவ சீட் பெறுபவர், கத்தரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்துவிட்டு போய்விடுவார். அப்படிப்பட்ட மருத்துவர் தேவையா? நீட் தேர்வு போராட்டத்தில் பாலஸ்தீன நாட்டின் கொடி வைத்திருப்பவனுக்கு என்ன வேலை?

    நீட் தேர்வு சுமூகமாக நடந்து முடிந்து ரிசல்ட் வெளிவந்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் பிரதான் ஏன் பதவி விலக வேண்டும்?மாணவர்கள் போராட்டத்தில் காங்கிரஸின் ராகுல்காந்திக்கு என்ன சம்பந்தம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இன்று காலை 10 மணிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களை பாஜகவினர் முற்றுகையிடுகிறார்கள். தேச நலனுக்கு எதிராக செயல்படும் சக்திகளை விரட்டியடிக்க தேசப்பற்று கொண்டவர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் ! என நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

    English Summary

    Tamil nadu BJP to stage protest in Tamil nadu Congress committee offices today, Nainar Nagendran calls for protest.