Nutritional Value: காமராஜர் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் போஷாக்கு என்ன தெரியுமா?

  • சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளை தவிர தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கி வைத்த காலை உணவு திட்டத்தில் ஒரு மாணவருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் விஜய், சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

    Advertisement

    அப்போது மாணவர்களுக்கு முதல்வர் விஜய் சர்க்கரை பொங்கலை பரிமாறினார். அவர்களுடன் அமர்ந்து விஜய்யும் உணவு சாப்பிட்டார். அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்டுக் கொண்டே இருந்தார்.

    பின்னர் அந்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் சென்ற விஜய் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவர் டம்ளரை எடுத்து தலையில் வைத்துக் கொண்டார். உடனே அந்த டம்ளரை வாங்கி, வேறு டம்ளரை கொடுத்தார்.

    பின்னர் தனது நண்பனுக்கு தண்ணீர் கொடுங்க என ஒரு மாணவன் முதல்வர் விஜய்யிடம் கேட்ட போது அவர் தண்ணீரை பெற்று கொடுத்தார். இப்படியாக மாணவர்கள் செய்த சின்ன சின்ன சேட்டைகளை அவர் ரசித்தார்.

    Advertisement

    ஒவ்வொரு வகுப்பறையிலும் அவர் மாணவர்களை சாப்பிடுமாறு கூறிவிட்டு சென்றார். இந்த உணவு திட்டத்தில் என்ன மெனு என்பதை பார்க்கலாம். திங்கள்கிழமைகளில் உப்புமா, செவ்வாய்க்கிழமைகளில் கிச்சடி, புதன்கிழமைகளில் பொங்கல், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை இனிப்பு வகை என திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த உணவில் ஒரு மாணவருக்கு 294 கிலோ கலோரி ஆற்றல், 9.85 கிராம் புரதம், 5.91 கிராம் கொழுப்பு, 1.64 மில்லிகிராம் இரும்புச் சத்து, 20.41 மில்லிகிராம் கால்சியம் கிடைக்கும்.

    இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44,984 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 34 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக ரூ 217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதால் அந்த இரு தொகுதிகளை தவிர மற்ற இடங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்த போது அவரும் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு தனது தட்டை தானே எடுத்துச் சென்றார்.

    மேலும் இந்த நிகழ்வில் விஜய் வருவதற்கு முன்பு மாணவர்களின் புத்தகப் பைகளை போலீஸார் சோதனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போல் ஸ்டாலின், குழந்தைகளுக்கு பக்கத்திலேயே அமர்ந்து சாப்பிட்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் விஜய் குழந்தைகளுக்கு நடுவே சற்று இடைவெளி விட்டு அமர்ந்து சாப்பிட்டார். இதுவும் பேசுபொருளாகும்.

    English Summary

    CM Vijay has started Breakfast scheme for government and government aided middle schools students. Do you know the nutritional value of the food received by each of the student?