தமிழக பட்ஜெட்: சட்டசபைக்கு பட்ஜெட் பேப்பருடன் சிறிய பாக்ஸுடன் வந்த மரிய வில்சன்! என்னவா இருக்கும்?

  • சென்னை: தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்த நிதியமைச்சர் மரிய வில்சன், ஜெபமாலையுடன் வந்திருந்தார். தவெக ஆட்சிக்கு வந்து முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    2026- 2027-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் பயணம் , ரூ 2500 மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவை குறித்து எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பட்ஜெட்டை தாக்கல் செய்ய தலைமைச் செயலகத்திற்கு வந்த மரிய வில்சன், ஜெப மாலையையும் கொண்டு வந்தார். பொதுவாக பட்ஜெட்டின் போது முந்தைய ஆட்சிகளில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் வைத்து அதிமுக, திமுக நிதியமைச்சர்கள் கொண்டு வருவதுண்டு.

    இதையடுத்து முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவதுண்டு. அந்த வகையில்தான் இந்த பட்ஜெட் அறிக்கையை மரிய வில்சனின் நம்பிக்கைபடி ஜெபமாலையுடன் வந்திருந்தார்.

    அவர் சரியாக 10.05 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அது போல் 7171 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டன.

    Advertisement

    அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தையின் பிறப்பை கொண்டாடும் வகையிலும் தாய்மையின் இன்பத்தையும் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையிலும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

    மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். அரசின் வருவாய் நேரடியாக கருவூலத்தைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அறம், பொருள், இன்பம் என்ற உயரிய நோக்குடன் 10 தூண்களை அடிப்படையாகக் கொண்ட வெற்றி தமிழகம் தொலைநோக்கு திட்டங்கள் ஆவணம் வெளியிடப்பட்டது.

    2036 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. வருமான பெருக்குவதற்கான முற்முயற்சிகளாக மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ 1000 கோடி வரை வரவு வைக்கப்படும். வெளிப்படையான டெண்டர் விடப்படும்.

    Advertisement

    சுரங்க நடவடிக்கைகள் முழுமையான கணினிமயமாக்கப்படும். ஏறத்தான ரூ 15 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கொண்டு வரப்படும்.

    ஒரு பைசாவும் தொடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

    சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிலையிலேயே அனுமதி அளிக்கப்படும். அதிகாரப் பகிர்ந்தளிப்பு மூலம் விரைவான சேவை, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    அரசு பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் கொண்டு வரப்படும். இதன் முக்கிய அம்சங்கள் தினசரி தூய்மைப் பணிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை பராமரிப்பு செய்யப்படும். 24 மணி நேரம் பாதுகாக்க சிசிடிவி பொருத்தப்படும்.

    Advertisement

    3,734 அரசு பள்ளிகளில் ரூ 2132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும். பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள், நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவப்படும். 9- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடைகள், தங்குமிடம், பாடப்புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்படும். பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு மரியவில்சன் பட்ஜெட்டை வாசித்தார்.

    English Summary

    Tamil nadu Finance Minister Marie Wilson has come to assembly to table budget 2026- 2027 with holy jaba malai.