இவ்வளவு நிதானமா.. 151 நிமிடங்களாக தவெகவின் முதல் பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் மரிய வில்சன்!

  • சென்னை: 2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் 151 நிமிடங்கள் வாசித்திருக்கிறார். காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய மரிய வில்சன், நிதானமாக ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிது ஒதுக்கீடு, என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை விளக்கினார். இறுதியாக பட்ஜெட் உரையை மதியம் 12.31 மணிக்கு நிறைவு செய்தார்.

    Advertisement

    தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் தவெக அரசு வென்று ஆட்சியை அமைத்துள்ள நிலையில், தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டசபைக்கு பட்ஜெட் அறிக்கையுடன் வரும் போது, தன்னுடைய கைகளில் ஜெப மாலையையும் வைத்திருந்தார். இதன்பின் தவெகவின் கொள்கைத் தலைவர்களான பெரியார், காமராஜர், அஞ்சலையம்மாள், அம்பேத்கர் மற்றும் வேலு நாச்சியார் ஆகியோரை வணங்கி உரையை தொடங்கினார்.

    சரியாக 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன், நிதானமாக ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு மற்றும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை வாசித்தார். அதன்படி பள்ளிக் கல்விக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்விக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறைக்கு ரூ.11,532 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.14,830 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூ.3,609 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கல்வித்துறை தவிர்த்து பெரும்பாலான துறைகளுக்கு கடந்த முறையை விடவும் இம்முறை கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளை அனைத்தையும் மதியம் 12.31 மணி வரை வாசித்தார். மொத்தமாக அமைச்சர் மரிய வில்சன் 151 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    English Summary

    Tamil Nadu Budget 2026: Minister Maria Wilson Delivers 151-Minute Speech for Tamil Nadu Budget 2026