மொத்தமாக மாற போகுது பள்ளி பாடத்திட்டம்.. ₹25 கோடி ஒதுக்கீடு செய்த விஜய் அரசு

  • சென்னை: இன்றைய தினம் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக பட்ஜெட் சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படும் என அறிவித்த மரிய வில்சன், இதற்காக ₹25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

    Advertisement

    கடந்த மார்ச் மாதம் அப்போது இருந்த திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், அதில் ஆட்சி மாறியது. விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது. இந்தச் சூழலில் தான் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

    Advertisement

    நிதியமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக திருமணமாகும் தாலிக்கு தங்கம் மற்றும் பட்டுப்புடவை, கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதேபோல பள்ளிக்கல்வி சார்ந்தும் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது அவர், "மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் கற்றலில் முதலிடம் தமிழ்நாடு! பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கும் இலக்கோடு இத்திட்டத்திற்கு ₹25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

    Advertisement

    இது தவிர பொது நூலகங்களை நவீன டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பதற்கு ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். அவர் மேலும், "மாநிலம் முழுவதும் மாணவர்களின் தங்கும் விடுதி வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம் (TNSHIC) என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    English Summary

    Tamil Nadu Finance Minister Maria Wilson announced a major revamp of the school curriculum(தமிழ்நாட்டில் பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பு): Tamil Nadu Budget latest news in tamil.