50 ஆண்டுகளுக்கு கடனை குறைக்க முடியாது.. இனியும் அதிகரித்து கொண்டே செல்லும்.. நிதித்துறை செயலர்!

  • சென்னை: தமிழ்நாட்டின் கடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது என்று பட்ஜெட் தாக்கலுக்கு பின் நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்லும் என்று கூறிய நிதித்துறை செயலாளர் சித்திக், மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் கடன் உச்சத்தில் இருப்பதாக விஜய் சாடி இருந்தார். இதன்பின் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில், கடன் விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின் திமுக ஆட்சியின் போது வாங்கப்பட்ட கடன் விவகாரம் விவாதமாகியது. இந்த நிலையில் 2026-27ம் நிதியாண்டில் ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க தவெக திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து நிதித்துறை செயலர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்த சொந்த வரி வருவாய் ரூ.2.26 லட்சம் கோடியாகும். வரி அல்லாத சொந்த வருவாய் ரூ.27,835 கோடியாகும். மத்திய அரசிடம் இருந்து வரி பகிர்வு ரூ.2,531 கோடியாகும். மத்திய அரசு தரும் மானியங்காள் மற்றும் பகிர்வகங்கள் ரூ.32,922 கோடியாகும். மொத்தமாக வரி வருவாய் ரூ.3 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

    வருவாய் கணக்கில் இருந்து செலவு செய்வது ரூ.4 லட்சத்து 5,802 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுய்ள்ளது. இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மூலதள செலவுகள் ரூ.56,985 கோடியாகும். மொத்த பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல புதிய திட்டங்களை தவெக அரசு தொடங்கியுள்ளது.

    Advertisement

    200 யூனிட் மின்சாரத்திற்கு ரூ.1,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.6,082 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி, அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி, வெற்றி வீடு திட்டத்திற்கு ரூ.1,000 கோடி, சிங்கப்பெண் அதிரடி படை திட்டத்திற்கு ரூ.313 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை இக்கட்டான சூழலில் உள்ளது. வரவுகளை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள. பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளதால், மேலும் விலையேற்றும் திட்டம் இல்லை. கடந்த முறை ரூ.10 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை இருந்தது. மாநில அரசின் கடன் சுமை கடந்த முறை 3.4% இருந்தது. இந்த ஆண்டு கடனை அதிகமாக உயர்த்தாததால் 3.17%ஆக குறையும்.

    Advertisement

    வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது. தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்லும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu Budget 2026: TN Debt Cannot Be Reduced for Next 50 Years, Finance Secretary Siddique Post-Budget