ரூ.1000 மட்டும் தான்.. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிடையாது.. பெண்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்

  • சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வென்று முதல் முறையாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தவெக தனது வாக்குறுதியில் கூறிய மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அதுபற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஏமாற்றியது.

    Advertisement

    தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால் மாதந்திர கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் திருமணமான 60 வயது வரையிலான அனைத்து பெண்களுக்கும் ரூ.2,500 வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    Advertisement

    தமிழகத்தில் தவெக அரசு அமைந்து முதல்வராக விஜய் பதவியேற்றவுடன் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செயல்பாட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

    தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. தமிழகத்தில் மொத்த கடன் ரூ. 13.18 லட்சம் கோடியாக இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் தான் தவெகவின் மாதந்தோறும் மகளிருக்கு வழங்கும் ரூ.2,500 உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெயர் மதிப்புமிகு மகளிர் திட்டம் என்று தவெக அரசு மாற்றம் செய்துள்ளது.

    Advertisement

    மேலும் தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார். சுமார் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை இந்த பட்ஜெட் உரையை மரிய வில்சன் வாசித்தார். பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

    அப்போது மகளிருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உதவித்தெகை ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா? என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் கடைசி வரை வெளியாகவில்லை. இதனால் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்துள்ளது.

    Advertisement

    இதனால் வரும் மாதங்களில் பெண்களுக்கு உரிமைத்தொகையாக ரூ.1000 மட்டுமே கிடைக்கும். தற்போது தமிழகத்தில் மாதந்தோறும் 1 கோடியே 30 லட்சத்துக்கு 69 ஆயிரத்து 831 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ரூ.15,600 கோடி செலவாகிறது. தற்போது தவெக மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக அதிகரிக்கும் பட்சத்தில் இந்த திட்டத்துக்கான செலவு டபுளாகும். இது தமிழக அரசின் செலவை அதிகரித்து கஜானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தற்போது இந்த திட்டம் பற்றிய அ்றிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகவில்லை.

    English Summary

    The Tamil Nadu budget for the 2026–27 fiscal year is set to be presented today. As Finance Minister Maria Wilson prepares to present the budget, there is anticipation regarding whether the women's entitlement allowance—promised by TVK—will be raised from Rs.1,000 to Rs.2,500.