போடு தகிட தகிட.. ரூ.4000+ரூ.2500! அக்கவுண்டுக்கே வர போகுது! சிஎம் விஜய் போட்டு வைத்திருக்கும் ப்ளான்

  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற முதல்வர் விஜயலான தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும் என விஜய், அதிகாரிகளுக்கும், நிதி அமைச்சருக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4500 உதவித்தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 வழங்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டாலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அது சாத்தியப்படவில்லை. மக்கள் கூட்டம் போலீஸ் கெடுபிடி என பல்வேறு சிக்கல்களால் 10 மாவட்டங்களில் மட்டுமே அவர் பிரச்சாரம் செய்தார்.

    Advertisement

    ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 50 தொகுதிகளை தாண்டி விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. இருந்தபோதும் பிரச்சாரத்தின் போது அவர் அளித்த முக்கிய வாக்குறுதிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.

    தமிழக பட்ஜெட் 2026

    அதில் தாய்மாமன் சீர் திட்டம், தாலிக்கு தங்கம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றன. இந்த நிலையில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் விஜய் 2026 2027 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். நிதியமைச்சர் வில்சன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    Advertisement

    முதல்வர் விஜய்

    இந்த நிலையில் பட்ஜெட்டை ஒட்டி கடந்த சில தினங்களாகவே சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது.

    தவெக பட்ஜெட்

    இந்த கூட்டத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி, புதிய முதலீடுகள், தொழிற்சாலைகளுக்கு அனுமதி, உட்கட்டமைப்பு மேம்பாடு, மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆகஸ்ட் முதல் முதல் வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    Advertisement

    மகளிருக்கு மாதம் ரூ.2500

    இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல முக்கிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் சொல்கின்றன. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர், திருமண உதவியாக ஒரு சவரன் தங்கம் பட்டுச்சேலை, மாணவர்களுக்கு கல்விக்கடன், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம் பெற இருப்பதாக சொல்லப்படுகிறது.

    வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000

    குறிப்பாக வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமும் முக்கிய திட்டமாக இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பெண்கள் இளைஞர்கள் வாக்கு வாங்கி தான். தற்போது அவர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்புகள் இடம் பெறலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் சொல்கின்றன.

    Advertisement

    பட்ஜெட் அறிவிப்பு

    அதே நேரத்தில் இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஏற்பாடுகள் குறித்தும் சில தகவல்களை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டு பெற்றதாக சொல்லப்படுகிறது. வருவாயை அதிகரித்து செலவுகளை குறைக்கும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை எந்தவித தொய்வும் இன்றி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் தான் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்புகளாக வெளியாகும் என்கின்றனர்.

    English Summary

    Tamil Nadu's first TVK budget is expected to include ₹4,000 unemployment assistance and ₹2,500 monthly aid for eligible women.