விஜய் அரசின் முதல் பட்ஜெட் எப்படி இருக்கு? ஒன்இந்தியா கேட்டபோது ஓடிப்போன பொது ஜனம்

  • சென்னை: தமிழக சட்டசபையில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று தாக்கல் செய்தார். தமிழ்நாடு வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் என்பதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த பட்ஜெட் குறித்து நமது ஒன்இந்தியா தமிழ் நேரடியாக களத்தில் இறங்கி மக்களிடம் கருத்து கேட்டோம். மக்கள் பலரும் வரலாறு காணாத அளவுக்கு தெறித்து ஓடியது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

    Advertisement

    விஜய் அரசின் முதல் பட்ஜெட் மீது பொதுமக்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மகளிர் உரிமை தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா, முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்படுமா, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் தொடர்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என பல கேள்விகள் மக்களிடம் இருந்தன. இருப்பினும், அப்படி எதுவும் முக்கிய அறிவிப்புகள் இல்லை.

    Advertisement

    தெறித்து ஓடிய பொதுமக்கள்

    இதற்கிடையே பட்ஜெட் குறித்து பொதுமக்களின் மனநிலை என்ன என்பதை அறிய நமது ஒன்இந்தியா தமிழ் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். கிண்டி, சைதாப்பேட்டை, வளசரவாக்கம், டி.நகர், கிண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான நபர்கள் பட்ஜெட் குறித்து கருத்து கூறவே மறுத்துவிட்டனர். எது பட்ஜெட்டா அதை பார்க்கலையே என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக இருந்தது. இதன் மூலம், தவெக அரசின் பட்ஜெட் மீது பொதுமக்களுக்கு எந்தவொரு ஆர்வமும் ஏற்படவில்லை என்பதை யூகிக்க முடிகிறது.

    Advertisement

    எதிர்பார்ப்பு

    பட்ஜெட் குறித்து பேசிய சிலரும், சில விஷயங்கள் திருப்தி தரவில்லை என்றே கூறினர். மேலும், "முதலில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500, முதியவர்களுக்கு ரூ.3,000 வழங்குவதாகக் கூறப்பட்டிருந்தது. அது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. இன்னும் நிறைய நல்ல அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் இருந்தோம். ஆனால், எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

    (மக்களின் பதிலை அறிய வீடியோவை கிளிக் செய்யலாம்) முந்தைய திமுக ஆட்சியின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, "முந்தைய அரசின் பட்ஜெட் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் சில விஷயங்களை வேற மாதிரி சொல்லியிருக்காங்க. ஆனாலும் இதை எல்லாம் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிட முடியும்" என்றார்.

    Advertisement

    வாக்குறுதிகள்

    வேறு சிலர், "முதல்வர் தேர்தலுக்கு முன் சொன்ன பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை. மகளிர் உரிமை தொகையை உயர்த்துவதாகக் கூறினார்கள். முதியோர் உதவித்தொகை குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. பெண்களுக்கான இலவச பேருந்து தொடர்பாகவும் எதிர்பார்த்தோம். ஆனால் அதுபோன்ற அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. ஏழை மக்கள் இயல்பாகவே இதுபோன்ற உதவித் திட்டங்களை எதிர்பார்ப்பார்கள். ஆனால், எதுவுமே இல்லை" என்றும் கூறினார்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் இந்த பட்ஜெட்டை "பெயர் மாற்று பட்ஜெட்" விமர்சனம் செய்திருந்தார். இது குறித்த கேள்விக்கு, "அது அரசியல் விமர்சனம்.. அவர்கள் இவர்கள் மீது குறை சொல்வார்கள். இவர்கள் அவர்கள் மீது குறை சொல்வார்கள். அது அரசியலின் ஒரு பகுதி. அதைப் பற்றி எல்லாம் பொதுமக்கள் அதிகம் கவலைப்பட மாட்டார்கள்" என்றார்.

    Advertisement

    அவர் மேலும், "சாலைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்தே இருக்கின்றன. பல ஆட்சிகள் மாறிவிட்டன. இப்போது இந்த அரசு அதை எப்படி சரி செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

    English Summary

    OneIndia Tamil spoke to the public across Chennai to understand their views on the Vijay government(தமிழ்நாடு பட்ஜெட் குறித்து மக்கள நினைப்பது என்ன): Tamil Nadu Budget latest news in tamil.