சமூக நீதி சர்வேவுக்கு தனி ஆணையம்.. கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?- அமைச்சர் பேட்டி

  • சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான, 3-வது அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அனைத்து அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்தார்.

    Advertisement

    அதனை தொடர்ந்து சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் எடுக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரின் சமூக பொருளாதார நிலையை ஆய்வு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் தொடங்க முன்வந்துள்ள நிறுவனங்களின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள், அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

    அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "அமைச்சரவை கூட்டத்தில் 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் அது முடிந்தபிறகு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக நீதி ஆணையம் அமைத்து கணக்கெடுப்பு நடைபெறும்.

    Advertisement

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழம்பூர் கிராம மக்களுக்கு அவர்களின் நிலம் ஒப்படைக்கும் பொருட்டு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல்வர் விஜய் தலைமையில் கூடியது அமைச்சரவை.. 3வது முறையாக தவெக அரசின் கேபினட் கூட்டம்!

    பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமிற்கோ மதம் மாறினால் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்களை வழங்கினார். மக்களின் தேவையறிந்து செயல்படவும் அவர்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister CTR Nirmal Kumar has stated that four key decisions were taken during the cabinet meeting held today, chaired by Tamil Nadu Chief Minister Vijay. He mentioned that the cabinet has approved the formation of a commission to conduct a caste-based census in Tamil Nadu.