வாக்காளர் பட்டியல் விவகாரம்.. வரும் 23 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்.. தமிழக தேர்தல் அதிகாரி அழைப்பு

  • சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். வரும் அக்டோபர் 23 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னையில் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு வித்துள்ளது.

    Advertisement

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட மொத்தம் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் "சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம்" (SSR) நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    Advertisement

    இதற்கான தகுதி நாளாக 2027 ஜனவரி 1 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில், பொதுமக்கள் அல்லது புதிய வாக்காளர்கள் தங்களின் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    எஸ்.ஐ.ஆர் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில்தான், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாளை மறுநாள் 23 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பர்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

    Advertisement

    இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களைப் பட்டியலில் இணைப்பதுடன், இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்தர்களின் பெயர்களையும் நீக்கவும் திட்டமிட்டு தேர்தல் ஆணையம் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளது.

    English Summary

    The Chief Electoral Officer of Tamil Nadu has convened an all-party meeting to discuss the special revision of the electoral roll. The meeting, chaired by Chief Electoral Officer Archana Patnaik, is scheduled to take place in Chennai on October 23rd. The Election Commission has extended invitations to all political parties to participate in this consultative meeting.