விஜய்யின் பெரியம்மா முதியோர் இல்லத்தில் வசித்தது ஏன்? 92 வயதில் காலமான அமல் ராஜசேகரன்!

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகரன், சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது 92-வது வயதில் வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் முதல்வரின் பெரியம்மா முதியோர் இல்லத்தில் ஏன் வசித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் சகோதரர் ராஜசேகரனின் மனைவி அமல் ராஜசேகரன். இவர் சென்னையில் உள்ள தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 92 வயதான அவர், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    Advertisement

    என்ன காரணம்

    இதற்கிடையே முதல்வர் விஜய்யின் பெரியம்மா ஏன் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அவரது இரண்டு மகன்களும் ஒரு மகளும் வெளிநாடுகளில் வசித்து வருவதால், வயதான காலத்தில் தேவையான பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகளுக்காக முதியோர் இல்லத்தில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் ராஜசேகரன் மற்றும் அமல் ராஜசேகரன் இருவரும் தாங்களாகவே முதியோர் இல்லத்தில் தங்கியதாக கூறப்படுகிறது.

    Vijay sad: ஜோ ஜோ என அழைத்த பெரியம்மா அமல் காலமானார்! உடைந்து நீலாங்கரை ஹோமிற்கு சென்ற விஜய்

    நீலாங்கரையில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில்தான் அமல் ராஜசேகரன் தனது கணவர் ராஜசேகரனுடன் வசித்து வந்தார். பெரியம்மாவின் மறைவையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் விஜய் தனது தாய், தந்தையுடன் நேரில் சென்றிருந்தார்.

    Advertisement

    எஸ்.ஏ. சந்திரசேகர்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர கிராமமான முத்துப்பேட்டைதான் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பூர்வீகம். நான்கு தலைமுறைகளாக விஜய்யின் குடும்பத்தினர் முத்துப்பேட்டையில் வசித்து வந்துள்ளனர். எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ராஜசேகரன், தனசேகரன் என இரண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் இருந்தனர். அவர்களில் தனசேகரனும், அவரது தங்கையும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர்.

    சைலண்டாக ஓடிடியில் வந்து இறங்கிய "சிக்மா".. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் மகன்

    முதியோர் இல்லம்

    பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜசேகரன்- அமல் ராஜசேகரன் தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ராஜசேகரன் - அமல் ராஜசேகரன் தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் வயதான காலத்தில் அன்றாட தேவைகளை கவனித்து கொள்ளவும், மருத்துவ உதவிகளை பெறவும் அவர்களுக்கு ஒரே இடத்தில் தேவையான வசதிகள் கிடைக்க வேண்டியிருந்தது.

    Advertisement

    இதை கருத்தில் கொண்டே அவர்கள் நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவரும் தங்கியிருந்தனர். அங்கு உணவு, உடை, பொழுதுபோக்கு வசதிகளுடன், வாராந்திர மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அவசர கால மருத்துவ உதவிகளும் கிடைக்கும் என்பதால் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

    English Summary

    Amal Rajasekaran, wife of Tamil Nadu Chief Minister Vijay's paternal uncle Rajasekaran, passed away at the age of 92(முதியோர் இல்லத்தில் விஜய் பெரியம்மா காலமானார்): Vijay Aunt Amal Rajasekaran Dies in old age home.