எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி

  • சென்னை: தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை (MAWS) நேரடியாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக எந்த முதலமைச்சரும் நேரடியாக கையாளாகாத இந்த முக்கிய துறையை அவர் தேர்வு செய்தது, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பார்வையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சமீபத்தில் முதலமைச்சர் விஜய், உயர் அதிகாரிகளுடன் நடத்திய தொடர் ஆலோசனை கூட்டங்களில் தன் முடிவுக்கான காரணங்களை தெளிவாக விளக்கியுள்ளார். "நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறைகள்தான் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்துள்ளன. குடிநீர், சாலைகள், தெரு விளக்குகள், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளில் ஏற்படும் சிக்கல்களே மக்களின் முக்கிய பிரச்சனைகள்" என்று அவர் கூறியுள்ளார். இந்த துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையே சீரமைக்க முடியும் என்பது அவரது உறுதியான நம்பிக்கை.

    Advertisement

    சென்னையில் பிறந்து வளர்ந்தவரான முதலமைச்சர், நகரத்தின் நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார். கூவம் ஆறு, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட முக்கிய நீர்வழிகளை முழுமையாக தூய்மைப்படுத்தி, பசுமையான சென்னையை உருவாக்குவது அவரது நீண்டகால கனவு.

    முதலமைச்சரே இத்துறையை நேரடியாக கையாள்வதால், மத்திய அரசின் நிதி உதவி மற்றும் துறை ஒருங்கிணைப்பு எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டம் (CMIUTM) கீழ் மத்திய அரசிடம் இருந்து கணிசமான நிதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    ஊழல் ஒழிப்பில் மிகுந்த உறுதியுடன் செயல்படும் முதலமைச்சர், அடிமட்ட நிர்வாகத்தில் லஞ்சம் தலைகாட்டக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் கீழ்மட்ட அதிகாரிகளிடம் நடக்கும் முறைகேடுகளே மக்கள் அதிருப்திக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதைத் தடுக்க, உயர் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் மற்றும் 'ஃப்ரீ பவர்' வழங்கப்பட்டுள்ளது.

    தவறு செய்யும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், பணியிட மாற்றம் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
    இந்த உத்தரவுக்கு அமைய, சமீபத்தில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட நகராட்சி நிர்வாகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் தங்கி அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வந்த அதிகாரிகளின் கூட்டணி உடைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஊழலற்ற, வேகமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

    Advertisement

    முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான MAWS துறை மூலம் தமிழகம் முழுவதும் 24x7 குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த அதிரடி மாற்றங்கள், தமிழகத்தின் நகர்ப்புற கட்டமைப்பை உலக தரத்துக்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி, நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu CM Joseph Vijay Takes Direct Charge of MAWS Department: Game-Changing Reforms