தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல்

  • சென்னை: தமிழகத்திற்கான முழுநேர டிஜிபியை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள யூ.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்தது. இதில் தமிழக தலைமைச்செயலாளர் சாய்க்குமார், தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முழு நேர டிஜிபி நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் தான் டிஜிபி நியமனம் முடிவு செய்யப்படுகிறது.

    Advertisement

    அதில், தேர்தலுக்கு முந்தைய திமுக ஆட்சியில் யூ.பி.சி.யிடம் தாக்கல் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை, யூபிஎஸ்சி தேர்வு குழு நிராகரித்து விட்டது. புதியதாக மீண்டும் ஒரு பட்டியலை முந்தைய திமுக அரசு கொடுத்த போதும், அதுவும் தேர்விக்குழுவால் ஏற்கப்படவில்லை. ஆனாலும், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை மாற்றவில்லை திமுக அரசு. அதே சமயம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முழு நேர டிஜிபி விவகாரத்தை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என தீர்மானித்து, ஒத்தி வைத்தது தேர்வுக்குழு. இதனையடுத்து தேர்தல் கால டிஜிபியாக சந்திப்ராய் ரத்தோரை நியமித்தது தேர்தல் ஆணையம். இப்போது வரை அவர் தான் டிஜிபியாக இருந்து வருகிறார்.

    Advertisement

    இந்த நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, தவெக ஆட்சி பொறுப்பேற்றது. முதலமைச்சரானார் ஜோஜப் விஜய். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு வரும் நிலையில், டிஜிபி மாற்றமும் இருக்கும் என ஐ.பி.எஸ். வட்டாரங்களில் பரவி வந்தது. மேலும், தகுதியின் அடிப்படையிலும் சீனியாரிட்டி அடிப்படையிலும் சந்தீப்ராய் ரத்தோர் மிகச்சரியான அதிகாரி தான் ; அவரே நீடிக்கட்டும் என முதலைமைச்சர் விஜய்யிடம் சொல்லப்பட்டது. அதனை ஏற்று விஜய்யும் அதனை அனுமதித்தே வந்தார்.

    இந்த நிலையில், முறைப்படி முழுநேர டிஜிபி நியமிக்கப்பட வேண்டும்; தகுதியான அதிகாரிகளின் பட்டியலை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று தலைமைச் செயலாளர் சாய்க்குமாருக்கு உத்தரவிட்டது தேர்வுக்குழு. அதனடிப்படையில் நேற்று இந்த பட்டியலை எடுத்துக்கொண்டு சென்றனர். டெல்லியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் புதிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    அந்த பட்டியலில், சீனியாரிட்டி படி, முதல் மூன்று இடத்தின் முறையே ராஜீவ் குமார், சந்திப்ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. இதனை இறுதி செய்து ஒப்புதல் அளித்துள்ளது தேர்வுக்குழு.

    இந்த 3 அதிகாரிகளில் இருந்து ஒருவரை முழுநேர டிஜிபியாக தேர்வு செய்யும் அதிகாரம் முதல்வர் ஜோசப் விஜய்க்கு இருக்கிறது. அதனால், புதிய டிஜிபி யார் என்கிற கேள்வி ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசாரித்தபோது, ''டிஜிபி பொறுப்பை ஏற்க ராஜீவ்குமார் விரும்பவில்லை என தெரிகிறது. அதனால் இந்த ரேசில் ரத்தோருக்கும் மகேஸ் குமார் அகர்வாலுக்கும் தான் போட்டி. இதில் , மகேஸ்குமார் அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதாவது , உளவுத்துறை ஐஜி அஸ்ராகார்க், மகேஷ்குமார் அகர்வாலை கொண்டுவர விரும்புகிறாராம். அது குறித்து முதல்வரிடமும் சிபாரிசு செய்துள்ளாராம். அதேசமயம், உள்துறை செயலாளரின் சிபாரிசு சந்தீப் ராய் ரத்தோருக்கு இருக்கிறது. ரத்தோருக்கு ஆதரவாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பும் லாபி செய்து வருகிறது. அதனால், புதிய டிஜிபி விசயத்தில் உளவுத்துறை ஜெயிக்குமா? என அதிகாரிகள் விவாதி த்தபடி இருக்கிறார்கள்'' என்று தகவல்கள் கிடைக்கின்றன.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Tamil Nadu CM Vijay choice for the next DGP of the state : All you need to know