ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி!

  • சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீட்டை ஈர்க்கும் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் தொழிற்துறை அமைச்சகத்தை 30 வயது இளம் பெண் எஸ்.கீர்த்தனாவுக்கு வழங்கியுள்ளார். இப்பதவிக்கு இவரை நியமிக்கப்பட்ட போது கலவையான விமர்சனம் வந்ததது, இந்த நிலையில் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர், பேஸ்புக் என அனைத்திலும் ஒரு முக்கியமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், தொழில் தொடங்குவதற்கான அரசு அனுமதி நடைமுறைகளை உலகத் தரத்திற்கு மாற்றுவதற்கும் புதிய அரசு அதிரடியான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது. இதுக்குறித்து அமைச்சர் கீர்த்தனா ஒகு முக்கிய வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோ செய்தியின் இறுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.

    Advertisement

    கோட் சூட்-ல் கீர்த்தனா

    கோட்-சூட் உடையில் கார்ப்பரேட் பாணியில் பேசிய தமிழகத்தின் புதிய தொழில்துறை, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

    "அரசு அனுமதி கிடைக்கப் பல காலம் காத்திருக்க வேண்டும் என்ற நிலையை முதலில் மாற்ற வேண்டும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என குறிப்பிட்ட கீர்த்தனா, இதன் அடிப்படையில் தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு கீர்த்தனா சில முக்கிய வாக்குறுதியை அளித்து இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கும் வேளையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    Advertisement

    '21 நாள்' அசுர வேக அனுமதி

    தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைத்தள வீடியோ பதிவில், எந்தவொரு நிறுவனமும் அரசு அனுமதிகளுக்காக பைல்களை தூக்கிக்கொண்டு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற உறுதியான வாக்குறுதியை அளித்துள்ளார்.

    "மிக வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், அரசு அனுமதிகளுக்காக மாதக்கணக்கில் இழுத்தடிக்கும் ஒரு அரசை யாரும் விரும்ப மாட்டார்கள். பைல்கள், அனுமதிகள், தாமதங்கள் மற்றும் நீண்ட காத்திருப்பு ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் எனக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்" என்று கீர்த்தனா குறிப்பிட்டார்.

    Advertisement

    இதனைச் சீரமைக்கும் விதமாக, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு வெறும் 21 நாட்களுக்குள் அனைத்து அனுமதிகளையும் வழங்கும் அதிவேக 'ஒற்றைச் சாளர ஒப்புதல்' (Single Window Approval) முறை செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    ஒருவேளை ஏதேனும் ஒரு துறையில் அனுமதி தாமதமானால், அந்தப் புகாரை நேரடியாகத் தொழில்துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் கொண்டு செல்லும் 'டைரக்ட் எஸ்கலேஷன் சிஸ்டம்' (Direct Escalation System) எனப்படும் நேரடிப் புகார்ப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது முதலீட்டாளர்களுக்குப் பெரும் பாதுகாப்பை வழங்கும் என்றும் அவர் அந்த வீடியோவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பாஸ்ட்-டிராக் தொழில் மண்டலங்கள்

    தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி என்பது சென்னை அல்லது ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களுடன் மட்டும் சுருங்கிவிடக் கூடாது என்பதில் புதிய அரசு உறுதியாக உள்ளது. தொழில் வளர்ச்சியைத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், குறிப்பாக இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் (Tier 2, Tier 3 Cities) சமமாகப் பரவலாக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 'பாஸ்ட்-டிராக் தொழில் மண்டலங்கள்' (Fast-Track Industrial Zones) தீவிரமாக அமைக்கப்படும் என கீர்த்தனா தெரிவித்தார்.

    இதன் மூலம் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் உருவாகி, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஏஐ சிட்டி, ஸ்பேஸ் எகனாமி மற்றும் Nxt-Gen Tech

    உலக நாடுகள் அனைத்தும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாடு அதனை இப்போதே களத்தில் இறங்கி உருவாக்கத் தொடங்கிவிட்டது என்று அமைச்சர் கீர்த்தனா சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதற்காகத் தமிழகத்தில் தனியாகச் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் (AI Ministry) மற்றும் அதிநவீன 'ஏஐ சிட்டி' (AI City) உருவாக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமன்றி, இந்தியாவின் மிக முக்கியப் பொருளாதாரப் பிரிவுகளாக வளர்ந்து வரும் ட்ரோன் காரிடார் (Drone Corridor), மின்சார வாகனத் தயாரிப்பு (EV Manufacturing), கிரீன ஹைட்ரஜன் (Green Hydrogen) மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் (Space Economy) ஆகிய அதிநவீனத் துறைகளில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்குத் தமிழக அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

    "அடுத்த தலைமுறைத் தமிழ்நாட்டிற்கான மிகச் சிறந்த, சாதகமான தொழில் சூழலை உருவாக்க வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் விஜயிழ் தொலைநோக்குப் பார்வையாகும். தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்" என அமைச்சர் கீர்த்தனா இந்திய மற்றும் உலகளாவிய தொழிற்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu government under Chief Minister Vijay has launched aggressive measures to attract investments by promising single window approvals within 21 days and setting up Fast-Track Industrial Zones across Tier-2 and Tier-3 cities. Industries Minister S. Keerthana has vowed to create a business-friendly environment focusing on AI City, EV manufacturing, Green Hydrogen, and Space Economy.