முதல்வர் விஜய் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை 10வது மாடிக்கு மாற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • சென்னை: முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அறைகள் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக சட்​டசபை தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கடந்த மே 10 ஆம் தேதி ஆட்​சி​ப் பொறுப்பேற்றது. அதன்​பின்​னர் அலு​வல் மற்​றும் நிர்​வாக ரீதி​யாக பல்​வேறு மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அந்​தவகை​யில், தலை​மைச் செயல​கத்​தில் உள்ள முதல்​வர் அலு​வல​கம் தற்​போது இடமாற்​றம் செய்​யப்பட்டுள்ளது.

    Advertisement

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றம்

    தலை​மைச் செயலக வளாகத்​தில் 2 கட்​டிடங்​கள் உள்​ளன. பிர​தான புனித செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் உள்ள 3 தளங்களில் முதலமைச்சர், அமைச்​சர்​களின் அலு​வல​கங்​கள் உள்​ளன. மற்​றொரு கட்​டிடம் 10 அடுக்​கு​கள் கொண்ட நாமக்​கல் கவிஞர் மாளி​கை​. இதில் துறை செயலர்​களின் அலு​வல​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

    இந்நிலையில், முதல்​வர் அலு​வல​கத்தை மாற்ற வேண்​டுமென விஜய்க்கு ஆலோ​சனை​கள் வழங்​கப்​பட்​ட​தாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் 10-வது தளத்​திற்கு முதல்​வர் அலு​வல​கம் அதிகாரப்பூர்வமாக மாற்​றப்பட்டுள்ளது.

    Advertisement

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப்பிரிவு, முதலமைச்சரின் சமூக, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு அனைத்தும் உடனடியாக, தரைத்தளம் (500 சதுர அடி), இரண்டாம் தளம் (400 சதுர அடி) மற்றும் மூன்றாம் தளம் (2000 சதுர அடி) ஆகியவற்றில் காலியாக உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.

    நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலாத் துறையின் எழுதுப்பொருட்கள் அறையினை அத்துறை அமைந்துள்ள 9-வது தளத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    முதலமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதால் தற்போது அத்தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் அறைகள் அனைத்தும் மாற்றம் செய்யப்படுகின்றன.

    Advertisement

    பல்வேறு அலுவலகங்கள் மாற்றம்

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் அமைந்துள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொதுத் (கட்டடங்கள்) துறைக்கு ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மேலும் கூட்ட அரங்கில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை எடுத்துப் பாதுகாக்குமாறு சம்மந்தப்பட்ட துறையின் அலுவலக நடைமுறைப் பிரிவு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    உதவி செயற்பொறியாளர் (கட்டடம்), பொதுப்பணித் துறை, மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள் அனைத்தையும் இட மாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அறைகளிலும் அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணிபுரிய ஏதுவாக மின்சார வசதிகள் சம்மந்தமாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

    Advertisement

    பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-|| பிரிவு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுத்துறையின் தொலைபேசிகள் பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு ஏற்கெனவே உள்ளவாறு தொலைபேசி வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இம்மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu Government has officially announced that the Chief Minister's office is being shifted to the Namakkal Kavignar Maligai. The chambers of the Chief Minister, as well as those of the CM's secretaries and advisors—previously located at Fort St. George—have been moved to the 10th floor of the Namakkal Kavignar Maligai.