காங்கிரஸ்க்கு ‘குட்பை’.. திமுகவில் விரைவில் இணையும் செல்வபெருந்தகை? தாமதமாவது ஏன் தெரியுமா?

  • சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இழந்துள்ள செல்வபெருந்தகை திமுகவில் இணைவது பற்றி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.கடந்த சில வாரங்களாகவே இந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் செல்வபெருந்தகை கட்சியில் இணைவது தாமதமாவதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் செல்வபெருந்தகை. இவர் கடந்த 2024 ம் ஆண்டு முதல் கடந்த 8 ம் தேதி வரை செல்வபெருந்தகை காங்கிரஸ் தலைவராக இருந்தார். சட்டசபை தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக களமிறங்கி தோல்வியடைந்தார்.

    Advertisement

    தேர்தல் சமயத்திலேயே செல்வபெருந்தகை தேர்தல் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். அதன்படி செல்வபெருந்தகைக்கு பதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது

    இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக செல்வபெருந்தகை கடந்த சில வாரங்களாகவே திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    ஆனால் செல்வபெருந்தகை திமுக கட்சியில் இணைவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுகவின் முன்னாள் அமைச்சர் தாமோ அன்பரசன் கடும் தெிர்ப்பு தெரிவித்து வருகிறார். செல்வபெருந்தகை மற்றும் தாமோ அன்பரசன் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். செல்வபெருந்தகை திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டால் மாவட்டத்தில் தனக்கான முக்கியத்துவம் போய்விடலாம் என்று தாமோ அன்பரசன் நினைக்கிறார். இதனால் அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இருப்பினும் செல்வபெருந்தகையை கட்சியில் சேர்ப்பதில் திமுக தலைமை அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சட்டசபை தேர்தலுக்கு பிறகு தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இணைந்து 2 அமைச்சர் பதவிகளை கைப்பற்றியதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை. காங்கிரஸ் கட்சியை துரோகி என்று திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட திமுக நினைக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருவோரை அரவணைத்து கொள்கிறது திமுக. அந்த வகையில் செல்வபெருந்தகையை கட்சியில் சேர்க்க திமுக விரும்புகிறது. அதுமட்டுமின்றி ஒரு கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டது, ஆதிதிராவிடர் தலைவராகவும் இருப்பதால் செல்வபெருந்தகையை சேர்க்க திமுகவும் ஆர்வமாக உள்ளது.

    Advertisement

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ''செல்வபெருந்தகை திமுக நபராகவே செயல்பட் வருகிறா். கடந்த 2024ம் ஆண்டு கட்சியின் மாநில தலைவரானது முதல் திமுக தலைமையுடன் நெருக்கத்தை அதிகரித்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி கூட்டணி மாற்றம் மற்றும் தமிழக அரசில் கூடுதல் அங்கீகாரம் பெறும்நோக்கில் விவாதங்கள் எழுந்தது. ஆனால் அவர் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் திமுகவுடன் கூட்டணி தொடர வே்டும் என்று வலுவாக கூறினார். சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்ததில் முக்கி பங்காற்றினார். விரைவில் அவர் திமுகவில் இணைய அதிக வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளனர்.

    English Summary

    Reports are circulating that Selvaperunthagai, having lost the post of Tamil Nadu Congress President, is in talks to join the DMK. While these discussions have been ongoing for the past few weeks, sensational details have emerged regarding the reasons behind the delay in his joining the party.