அலற வைக்கும் டெங்கு.. நேற்று ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா? இதுல உண்ணிக் காய்ச்சல் வேற!

  • சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 17,348 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 11 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு திடீரென அதிகரிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டுகளில் போதிய மழை பெய்த நிலையில் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட காரணங்களால் டெங்கு பாதிப்பு அதிகரித்தது.

    Advertisement

    ஆனால், தற்போது கோடை வெயில் போல வெயில் கொளுத்தி வரும் நிலையில் திடீரென டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முந்தைய அரசுகள் போல தமிழக வெற்றிக் கழக அரசு முன்கூட்டியே டெங்கு ஒழிப்பு பணிகளை தொடங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

    தற்போது பாதிப்பு அதிகரித்த பின்னர்தான் சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் அதிக அளவில் டெங்கு பாதிப்பு பரவி வருகிறது என்கின்றனர். 15ஆம் தேதி மட்டும் 133 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த அடுத்த நாட்களில் ஏறக்குறைய 250 நபர்கள் ஒரே நாளில் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். அதிகபட்சமாக செப்டம்பர் 16ஆம் தேதி 283 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்து இருக்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 1777 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக நேற்று 21 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தின் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 17,348 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 11 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஸ்கிராப் டைப்போஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4650 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமாக இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    இது மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும். பாதிப்பு இருக்கும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

    English Summary

    Tamil Nadu records 71 new dengue cases, taking the annual total to 17,348, while scrub typhus infections reach 4,650.