உள்ளதும் போச்சு! பரந்தூர் தொடங்கி.. ஓசூர் வரை! வளர்ச்சி திட்டங்களை முடக்கிய விஜய் அரசு! விமர்சனம்!

  • சென்னை: மாற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்பட்ட பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக பரந்தூர் விமான நிலைய திட்டம், சென்னை ஸ்போர்ட்ஸ் சிட்டி, கோவை கிரிக்கெட் மைதானம், சென்னை ரிங் ரோடு உள்ளிட்ட பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சில திட்டங்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகளே ஆண்டு வந்தன. ஊழல், வாரிசு அரசியல் என சில விமர்சனங்கள் அந்த கட்சிகள் மீது முன்வைக்கப்பட்டாலும் தமிழகத்தின் வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றியவை திராவிட கட்சிகள்.

    Advertisement

    திமுக அதிமுக ஆட்சிக் காலங்களில் தமிழகத்தை முன்னேற்றிய பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சென்னை அண்ணா மேம்பாலம் தொடங்கி, டைடல் பார்க், கைத்தறி பூங்கா, சென்னை மெட்ரோ எனத் திட்டங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    தமிழக வளர்ச்சி திட்டங்கள்

    இந்த நிலையில் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் மாற்றம் ஊழல் ஒழிப்பு என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் பல முக்கிய திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. குறிப்பாக பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம், பரந்தூர் மெட்ரோ, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    பரந்தூர் விமான நிலையம்

    இந்தப் பட்டியலில் மிக முக்கியமானது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம். சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டிருந்தது. நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.

    மெட்ரோ ரயில்

    மேலும், பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டு, பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 27.9 கி.மீ. மெட்ரோ நீட்டிப்பு திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.2,126 கோடி அளவுக்கு ஆரம்பகட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஸ்போர்ட்ஸ் சிட்டி

    செம்மஞ்சேரியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்காக வழங்கப்பட்ட ரூ.205.89 கோடி மதிப்பிலான பணி ஆணையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்தது. இதேபோல், ரூ.310 கோடி மதிப்பிலான வேளச்சேரி பறக்கும் பாலத் திட்டமும் தற்போது நிலுவையில் உள்ளது. திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற வேண்டியிருப்பதால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    ஓசூர் அறிவுசார் மையம்

    இதுமட்டுமல்லாமல், கிழக்கு கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான நான்கு வழி உயர்மட்ட சாலை திட்டம், கோவை பெரியார் நூலகம், கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஓசூர் டைடல் பார்க், ஓசூர் அறிவுசார் மையம், சென்னை பெரிபெரல் ரிங் ரோடு, திண்டுக்கல் ஆத்தூரில் நியோ டைடல் பார்க், என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

    Advertisement

    திமுக ஆட்சி

    இது மட்டுமல்லாமல் கடந்த திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு அந்த திட்டங்களை கைவிட்டு விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

    English Summary

    Parandur airport was dropped, while Sports City, Hosur TIDEL Park and other major Tamil Nadu projects face delays or uncertainty.