திமுக-வில் ஓட்டு டிரான்ஸ்பர் செய்யாத பழைய கூட்டணி இப்போ தவெக மடியில்! திருமா சொன்னாரே: தராசு ஷ்யாம்

  • சென்னை: திமுககூட்டணியை பின்னுக்கு இழுத்த அதே கட்சிகள் தான் தவெக கூட்டணிக்குச் செல்கின்றன. இதனால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இத்தனை எம்பி சீட்டு, இத்தனை மேயர் சீட்டு வேண்டும் என்று இஷ்டத்திற்கு நிர்பந்தம் செய்வார்கள் என்று பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசு கஜானா காலி என்ற தவெக விமர்சனத்துக்கும் பதிலடி தந்துள்ளார்.

    Advertisement

    ஒரு பிரபல யூடியூப் சேனலுக்குப் பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிக் கணக்குகள் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

    Advertisement

    கஜானா காலி, ஏகப்பட்ட கடன்

    அவர் சொல்லும்போது, புதிய அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை என்பது முந்தைய திமுக அரசு மீது 'கஜானா காலி, ஏகப்பட்ட கடன்' என்று பழனிவேல் தியாகராஜன் பாணியில் வெறுமனே குற்றம் சாட்டும் வெற்றறிக்கையாக மட்டும் இருக்கக் கூடாது.

    மாறாக, மக்களுக்கு அறிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் பெண்களுக்கான இலவச பஸ் பயணம் போன்ற முக்கிய வாக்குறுதிகளை எப்போது, எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதற்கான கால அட்டவணை மற்றும் தெளிவான புளூபிரின்ட் கொண்ட மதிப்பீடாக இருக்க வேண்டும்.

    Advertisement

    தனி விமானச் செலவுகள்

    அரசு கஜானாவில் நிதி இல்லை என்று காரணங்கள் சொல்வதை விடுத்து, முதலமைச்சர் விஜய் முதலில் தனது சொந்த டெல்லி பயணங்களுக்கான தனி விமானச் செலவுகளை குறைத்து பயணிகள் விமானத்தில் செல்ல வேண்டும். முந்தைய அரசு சரியில்லை என்பதால்தானே மக்கள் உங்களை மாற்றி ஓட்டுப் போட்டார்கள்? எனவே, மீண்டும் மீண்டும் முந்தைய ஆட்சியைத் திட்டுவது வெறும் அரசியலாகி மக்களுக்குச் சலிப்பையே ஏற்படுத்தும்.

    அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவி என்பது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், எப்படியும் 20 முதல் 25 இடங்களை ஜெயிக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கும் நிர்பந்தத்திற்கும் தவெக கூட்டணி தள்ளப்படும். ஆனால் இப்போது தவெக கூட்டணியில் இணையக்கூடிய கட்சிகள் எல்லாமே, முன்னதாக திமுக கூட்டணியில் இருந்தபோது எந்தவொரு பலனும் தராத கட்சிகள் தான்.

    Advertisement

    காங்கிரஸ் கட்சி உட்பட அந்தப் பழைய கூட்டணிக் கட்சிகளைத் தன் கூடவே வைத்துக்கொண்டு, முந்தைய ஆட்சியை விஜய் விமர்சனம் செய்வது கொஞ்சம் வித்தியாசமான அரசியல் வடிவமாக இருக்கிறது.


    உள்ளாட்சி தேர்தல் - தவெக அரசு

    கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்குக் காரணம் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததும், அவர்களின் ஓட்டு டிரான்ஸ்பர் நடக்காதது தான் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது விசிக கட்சிக்கும் பொருந்தும் என்பதால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பாகவே தங்களது தொண்டர்கள் கூட்டணிக் கட்சியின் வெற்றிக்காக வேலை செய்யவில்லை என்பதைத் திருமாவளவனே ஓப்பனாக ஒப்புக்கொண்டார்.

    Advertisement

    அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களுக்குப் போட்டியிட்டு வெறும் 5 இடங்களிலும், விசிக 8 இடங்களுக்குப் போட்டியிட்டு 2 இடங்களிலும் மட்டுமே வென்றன. இதன் மூலம், கூட்டணிக் கட்சிகள் எதுவுமே முதன்மைக் கட்சியின் வெற்றிக்கு உதவவில்லை என்பது தெளிவாகிறது.

    இப்போது திமுக கூட்டணியைப் பின்னுக்கு இழுத்த அதே கட்சிகள் தான் தவெக கூட்டணிக்குச் செல்கின்றன. இதனால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இத்தனை எம்பி சீட்டு, இத்தனை மேயர் சீட்டு வேண்டும் என்று இஷ்டத்திற்கு நிர்பந்தம் செய்வார்கள்.

    திமுக பழைய கூட்டணி

    ஏற்கனவே திமுக கூட்டணியிலேயே இந்த இடப் பங்கீட்டு நிர்பந்தங்களால் பெரும் சலிப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது அதே போன்ற அரசியல் நெருக்கடிகள் தவெக கூட்டணிக்கும் வரத் தொடங்கும். அவர்கள் கேட்கும் வார்டுகள் மற்றும் மேயர் பதவிகளை தவெக எப்படிச் சமாளிக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.

    Advertisement

    எனவே அரசு எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டாலும் சரி, புதியதாக அமையவுள்ள இந்தக் கூட்டணியில் வரவிருக்கும் அரசியல் நிர்பந்தங்களைத் தாண்டி தவெக அரசு எப்படி அரசியல் செய்யப் போகிறது, அடுத்தகட்டமாக எதை நோக்கி நகரப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றெல்லாம் கருத்து தெரிவித்துள்ளார்.

    English Summary

    Old Allies Who Ditched DMK Now in TVK! 'Thirumavalavan Proved It, SaysTharasu Shyam