இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக மின்வாரியத்தில் 8,000 வேலைவாய்ப்புகள்.. TNPSC மூலம் நியமனம்!

  • சென்னை: தமிழக அரசில், குறிப்பாக மின்வாரியத்தில் வேலை கிடைக்குமா? என காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மின்வாரியத்தில் 8000 கள உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. குறிப்பாக டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த பணிகள் நிரப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியிருக்கும் நிலையில் 2027 ஆம் ஆண்டில் 5000 பேரும், 2028ல் 3000 பேர் என இரண்டு கட்டங்களாக 8000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது தமிழ்நாடு மின்சார வாரியம். மின் உற்பத்தி, மின் பகிர்மானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தமிழக அரசின் மின்சார வாரியத்தின் மூலம்மே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Advertisement

    மின்வாரியத்தில் பல்வேறு காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் அந்த பணிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசு தரப்புக்கு தொடர் கோரிக்கைகள் எழுந்தது. மின்வாரிய பணிகளை சீராக மேற்கொள்ளவும் காலி பணியிடங்களை நிரப்பினால் தான் பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    "இங்க" தண்ணீரை விட பெட்ரோல் விலை கம்மி.. சென்னையில் இருந்து ரொம்ப ஈஸியாக போகலாம்!

    இந்த நிலையில் புதிதாக 8000 கள உதவியாளர்களை தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கருத்துருவை மின்வாரிய தலைவர் தமிழக அரசுக்கு அனுப்பி இருந்தார். அந்த கருத்துருவில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆண்டுக்கு 341 கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு தற்போது 8000 கள உதவியாளர்களின் நியமிக்க அனுமதி அளித்திருக்கிறது.

    Advertisement
    கடன் வாங்கி செலவு செய்வது தப்பு! யாருக்கு அட்வைஸ் சொல்கிறார் விஜய்? கடனில் தத்தளிக்கும் தமிழகம்!

    அதன்படி, முதல் கட்டமாக 2027 ஆம் ஆண்டில் 5,000 கள உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்ததாக, 2028ஆம் ஆண்டில் மேலும் 3,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மின்வாரியத்தில் கள உதவியாளர் பணிக்காக தயாராகி வந்த இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு வேலை பெற வேண்டும் குறிப்பாக மின்வாரியத்தில் வேலை பெற வேண்டும் என தேர்வுக்கு தயாராகி வந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வார காலத்துக்குள் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக டிஎன்பிஎஸ்சி மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu approves 8,000 TNEB field assistant posts, with 5,000 recruitments planned for 2027 and 3,000 for 2028 through TNPSC.