அடுத்த கோடை காலத்தில் தமிழகத்தில் கடுமையான மின்சார பற்றாக்குறை ஏற்படும் - ரெடியாகும் மின் வாரியம்!

  • சென்னை: தமிழகத்தில் வரும் 2027 கோடை காலத்தில், தினமும், 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படும் என தமிழ்நாடு மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    தமிழக மின் தேவை தினசரி சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இதுவே, கோடை காலத்தில் 20,000 மெகாவாட்டை தாண்டுகிறது. இந்த ஆண்டு கோடையில், 21,000 மெகா வாட்டாக அதிகரித்தது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி மின் தேவை, 21,714 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியது. கோடை காலம் முடிந்தும் கடந்த மாதம் வரை, வெயில் கடுமையாக இருந்தது. இதனால், தினசரி மின் தேவை, 20,500 மெகா வாட்டாக இருந்தது.

    Advertisement

    அதிகரித்த மின் தேவையைப் பூர்த்தி செய்ய, மின்சாரம் கிடைக்காததால், 2,000 மெகா வாட், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், வெளிச்சந்தையில், குறுகிய கால அடிப்படையில், மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்தது. ஒரு யூனிட் விலை 35 ரூபாய் அளவிற்கு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், வரும் கோடை காலத்தில் மின் தேவை, 23,672 மெகா வாட்டாக உயரும். இதை பூர்த்தி செய்வதில், தினமும் உச்ச நேரமான காலை மற்றும் மாலை, 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை, மின் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனால், குறுகிய கால ஒப்பந்தங்களின் கீழ், 3,200 மெகாவாட், நீண்ட கால அடிப்படையில், 1,500 மெகாவாட் மின்சாரத்தையும் கொள்முதல் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது. குறுகிய காலம் என்பது ஒரு நாள் முதல் ஓராண்டு வரை, நீண்ட காலம் என்பது ஐந்து ஆண்டுகள் முதல், 15 ஆண்டுகள் வரையாகும்.

    English Summary

    Tamil Nadu Electricity Board has estimated that the state will face a daily power deficit ranging from 3,610 MW to 7,971 MW during the summer of 2027.