கத்தி படத்தில் வசனம் எல்லாம் பேசினாரே.. அவையில் முதல்வர் விஜய் பேசும்போதே.. விவசாயிகள் சாலை மறியல்

  • சென்னை: இப்போது தமிழ்நாடு சட்டசபையில் காவிரி மேகதாது விவகாரம் தொடர்பான விவாதம் நடந்து வரும் சூழலில், தலைமை செயலகத்திற்கு வெளியே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாய அமைப்பினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே இன்றைய தினம் அவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

    Advertisement

    மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக இன்று சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது காவிரி என்பது தமிழகத்தின் உயிர்நாடி என்றும் விவசாயிகளுக்காக தமிழக அரசு துணை நிற்கும் என்றும் தமிழ்நாடு முதல்வர் விஜய் கூறினார்.

    முதல்வர் இப்படி கூறும்போதே, முழு கடன் தள்ளுபடி வேண்டி தலைமை செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தலைமை செயலகத்திற்கு வெளியே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முழு பயிர்க்கடன் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மேலும் கூறுகையில், "விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசின் ஆலோசனை கூட்டத்தில் தெளிவாக சொல்லி இருந்தோம். ஆனால், எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. வேளான் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் கவனத்தை ஈர்க்கவே இப்போது தலைமை செயலகம் முன்பு போராட்டத்தை நடத்துகிறோம்.

    தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் சொன்னதை தான் நிறைவேற்ற சொல்கிறோம். தேர்தல் சமயத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் முழுமையாக தள்ளுபடி என்றும் பெரிய விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி என்றும் கூறியிருந்தார். அதை தான் இப்போது நாங்கள் நிறைவேற்ற சொல்கிறோம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45+ விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    Advertisement

    கத்தி படத்தில் அவர் விவசாயிகளுக்காக ஏகப்பட்ட வசனங்களை பேசினார். அதையெல்லாம் நம்பி தான் விவசாயிகள் அவருக்கு வாக்களித்தோம். ஆனால், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகள் ஏமாற்றுகிறார்" என்றார்.

    English Summary

    Farmers staged a road blockade outside the Tamil Nadu Secretariat during the Assembly debate(தமிழக சட்டசபையில் நடைபெறும் போராட்டம்): Tamil Nadu Farmers Protest amid Cauvery and Mekedatu issue.