தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.. வெள்ளை அறிக்கை ரிப்போர்ட்

  • சென்னை: தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு ரூபாய்க் கடனுக்கு வட்டி செலுத்தவே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 ஆண்டுகளில் மட்டும் வட்டி செலவு 61%ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் நிதி நிலை எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தவெக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய தினம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து விளக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக மாநிலத்தில் கடன்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இது தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் கூறுகையில், "வட்டி, சம்பளம், ஓய்வூதியதற்காக மட்டும் மாநிலத்தின் 64% நிதி செல்கிறது. அனைவரையும் கவலைக்குள்ளாக்கும் வகையில் நிதி அசாதாரண நிலை இருக்கிறது. நமது ஆண்டு வட்டி செலவு ரூ.67,050 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் மொத்த மூலதன செலவை விட வட்டி செலவு. அதாவது எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய மூலதனத்தை விடக் கடனுக்கு வட்டியாக அதிக தொகையைச் செலுத்துகிறோம்.

    2017-2018 நிதியாண்டில் இந்த நிலை உருவானது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த இடைவெளி அதிகரித்தே வருகிறது. தற்போது மொத்த செலவில் வட்டி என்பது மட்டும் 22%ஆக இருக்கிறது. இது கர்நாடகாவில் 16%, குஜராத்தில் 12%, மகாராஷ்டிராவில் 10%ஆக உள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் சொந்த வரி வருவாயில் 34.8% வட்டி செலவுக்கே செல்கிறது. அதாவது மாநிலத்தின் சொந்த வரி வசூலில் ஒவ்வொரு 3 ரூபாயில் ஒரு ரூபாய் எந்தவொரு நலத்திட்டங்களுக்கும் ஒதுக்கப்படுவதற்கு முன்பே, பழைய கடன்களில் வட்டி செலுத்துவதில் கரைந்துவிடுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வட்டி செலவு 61%ஆக அதிகரித்துள்ளது.

    உதாரணத்திற்கு ஒரு குடும்பம் மாதம்தோறும் செலுத்தும் கடன் வட்டி, குழந்தைகளுக்கு மாதம்தோறும் செலுத்தும் தொகையை விட அதிகரித்துவிட்டது. வீட்டிற்கான பட்ஜெட்டை மிஞ்சிவிட்டது என்றால் எப்படி இருக்குமோ அந்தவொரு சூழல் தான் உருவாகியுள்ளது" என்றார்.

    English Summary

    Tamil Nadu Finance Minister Maria Wilson released a financial white paper revealing an extraordinary crisis(தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை): Tamil Nadu Financial White Paper latest news in tamil.