ரேஷனில் வெங்காயம் விற்பனை.. குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க தமிழக அரசு ஏற்பாடு.. சூப்பர்

  • சென்னை: வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மானிய விலையில் தமிழக ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    வெங்காயம்.. நம் வீட்டு சமையல் அறையில் தவிர்க்க முடியாத பொருளாக வெங்காயம் உள்ளது. தினந்தோறும் சமையலில் வெங்காயம் முக்கிய அங்கமாக உள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை தொடரந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30 ஆக இருந்தது. தற்போது சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

    அதேபோல் சின்ன வெங்காயம் கடந்த மாதம் இறுதியில் கிலோ ரூ.40-50க்கு விற்பனையாகி வந்தது. இது தற்போது கிலோ ரூ.70க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெங்காய விலை உயர்வும் மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் வெங்காயத்தை ரேஷன் கடைகள் வழியாக மானிய விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு தயாராகி வருகிறது. அதன்படி மொத்தமாக தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொ்ள்ள தொடங்கி உள்ளது. சில்லரை விலை கடைகளை ஒப்பிடும்போது குறைந்த விலையில் வெங்காயத்தை ரேஷன் கடைகளில் விற்க முடிவெடுத்துள்ளது.

    இதற்காக முதற்கட்டமாக 70,00 கிலோ வெங்காயம் ஒதுக்கீடு செய்யும்படி 'நாஃபெட்' (NAFED) என அழைக்கப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் தமிழக அரசுக்கு கிடைத்த உடன் ரேஷன் கடைகளில் விற்பனை செயயப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் தமிழக அரசு சார்பில் வெளியாக உள்ளது. அந்த அறிவிப்பில் எந்தெந்த ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்கப்படும்? ஒருவருக்கு எவ்வளவு வழங்கப்படும்? ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படும்? என்பது தொடர்பான விவரங்கள் இடம்பெற உள்ளது. தமிழக அரசின் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Onion Sales in Ration Shops: Onion prices continue to rise, causing hardship to the public. Amidst this situation, reports indicate that the Tamil Nadu government is preparing to sell onions at subsidized rates through the state's ration shops.