பொய்துப்போன மழை.. வறட்சியை சமாளிக்க ரூ.288.97 கோடி! அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!

  • சென்னை: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், தமிழக அரசு உரிய நிவாரணத்தை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் வறட்சியை சமாளிக்க ரூ.288.97 ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

    Advertisement

    இந்த நிதியை பயன்படுத்தி புதிய ஆழ்துளை கிணறுகளை அமைப்பது, ஏற்கெனவே அமைக்கப்பட்ட கிணறுகளை தூர் வார வைப்பது என, வறட்சியை சமாளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

    Advertisement

    காவிரி நீர்

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும். மேட்டூர் அணை வழியாக வரும் காவிரி நீரை நம்பி, டெல்டா மக்கள் குறுவை சாகுபடி செய்வார்கள். இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால், குறுவை சாகுபடி நடக்கவில்லை. எனவே 3.50 லட்சம் ஏக்கர் நிலம் பயிரிடப்படாமல் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில், விவசாயிகள் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை எதிர்பார்த்தனர்.

    முதல்வர் சி.ஜோசப் விஜய், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். எனவே தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை எதிர்பார்த்தனர்.

    Advertisement

    ஆனால், அதிகபட்சமாக ரூ.75,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக அரசு அறிவித்தது. இதுவே விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. எனவே முழு பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டங்களில் இறங்கினர். வேளாண் பட்ஜெட்டிலாவது இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.

    இந்நிலையில், தற்போது வறட்சியை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

    English Summary

    Drought Situation: As the Southwest Monsoon did not yield the expected rainfall this year, farmers had urged the Tamil Nadu government to announce appropriate relief measures. In response, the government has issued an order allocating ₹288.97 crore to tackle the drought situation.