வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்?

  • சென்னை: முதல்வர் விஜய் அமைச்சரவையில் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் தான் 22 அமைச்சர்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறுிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள நிலையில் முதல்வர் விஜய், மூத்த அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்பட இன்னும் 13 பேருக்கு இன்னும் பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. விஜய் முதல்வராகி உள்ள நிலையில் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இதில் 30 பேர் தவெக எம்எல்ஏக்கள். 2 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். இதுதவிர விசிகவில் ஒருவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஒருவர் அமைச்சர்களாகி உள்ளனர்.

    Advertisement

    பொதுவாக முதல்வர், அமைச்சர்களுக்கு சென்னையில் இருந்து பணியாற்றும் வகையில் அங்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இந்த பங்களாக்கள் உள்ளன. ஒவ்வொரு முறை புதியவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்கும்போது இங்கு அரசு சார்பில் பங்களாக்கள் வழங்கப்படும்.

    அந்த வகையில் முதல்வர் விஜய் தலைமையிலான இருக்கும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 22 அமைச்சர்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 22 அமைச்சர்களுக்கு தற்போது பங்களாக்கள் ஒதுக்கீடு செய்து செய்து தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி யார் யாருக்கு எந்தெந்த பங்களாக்கள் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    * அருண்ராஜ் - மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் - என்பி எண். 27 'முல்லை' பங்களா.

    * ஸ்ரீநாத் (மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர்) - என்பி எண். 15 'தாமிரபரணி' பங்களா.

    * கமலி (கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்) - என்சிபிஎண். 16 பங்களா.

    * ராஜ்குமார் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்) - பிபி எண். 3 'பாமனி' பங்களா.

    * காந்திராஜ் (கூட்டுறவுத் துறை அமைச்சர்) - என்பி எண். 12 ஏ 'சிறுவாணி' பங்களா.

    Advertisement

    * ஜெகதீஸ்வரி கே (சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர்) - என்சிபி எண். 19 பங்களா.

    * ராஜேஷ் குமார் (சுற்றுலாத்துறை அமைச்சர் - காங்கிரஸ்) - என்பி எண். 37 பங்களா.

    * விஜய் பாலாஜி (கைத்தறி, துணிநூல், ஜவுளி துறை அமைச்சர்) - என்சிபி எண். 17 பங்களா.

    * விஜய் தமிழன் பார்த்திபன் (போக்குவரத்துத் துறை அமைச்சர்) - என்பி எண். 11 'ரோஜா' பங்களா.

    * ரமேஷ் (இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்) - என்சிபி எண். 15 பங்களா.

    Advertisement

    * விஸ்வநாதன் (உயர்கல்வித்துறை அமைச்சர்) - என்சிபி எண். 12 பங்களா.

    * குமார் .ஆர் (ஏ.ஐ, ஐ.டி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்) - 'அன்பு' பங்களா.

    * தென்னரசு.கே (வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்) - 'பொதிகை' பங்களா.

    * சம்பத் குமார் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்) - என்சிபி எண். 18 பங்களா.

    * முகமது பர்வாஸ் (தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்) - என்பி எண். 24 'மனோரஞ்சிதம்' பங்களா.

    * மரிய வில்சன் (நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்) - என்சிபி எண். 7ஏ பங்களா.

    Advertisement

    * விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்) - பிபி எண். 1 பங்களா.

    * ஷாஜஹான் (சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்) - என்சிபி எண். 1 பங்களா.

    * வன்னி அரசு (சமூக நீதித்துறை அமைச்சர்) - என்பி எண். 6 'சாமந்தி' பங்களா.

    * விஜயலட்சுமி (பால் மற்றும் பால் வள மேம்பாட்டு துறை அமைச்சர்) - என்சிபி எண். 7 பங்களா.

    * லோகேஷ் தமிழ்செல்வன் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்) - என்பி எண். 36 பங்களா.

    * வினோத் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்) - பிபி எண். 2 பங்களா.

    அரசாணையின் விவரப்படி, அமைச்சர்களுக்கு இந்த பங்களாக்கள் அனைத்தும் முற்றிலும் வாடகை இல்லாத அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக, அமைச்சர்கள் இந்த அரசு பங்களாக்களில் குடியிருக்கும் காலம் வரை, தங்களது தனிப்பட்ட வீட்டு வாடகைப்படியை அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 22 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் முதல்வர் விஜய், 12 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மூத்த அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், வெங்கட்ரமணன், டிகே பிரபு, கீர்த்தனா, ராஜ்மோகன் உள்பட 12 பேருக்கு இன்னும் பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான காரணம் பற்றி தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் அவர்கள் தங்கும் இடங்களுக்கு வாடகைகளை பெற்று கொள்ளலாம். விஜய் உள்பட சிலருக்கு சொந்தமாக பங்களா உள்ளதால் அவர்கள் அங்கு வசிக்க திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    English Summary

    Tamil Nadu Ministers Bungalows: Government bungalows situated on Greenways Road in Chennai have been allotted to 22 ministers of Tamil Nadu. While the Public Works Department has issued an official notification regarding these allocations, bungalows have yet to be assigned to 14 individuals-including Chief Minister Vijay and senior ministers such as bussy Anand, Sengottaiyan, Aadhav Arjuna.