ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசு! ரூ.16800 வரை போனஸ்! சிஎம் விஜய் சர்ப்ரைஸ்!

  • சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.8400 போனஸும், அதிகபட்சம் ரூ.16,800 போனஸும் வழங்கப்படவுள்ள நிலையில், 2 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தொழிலாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, திறன்மிக்க மனிதவளம் மற்றும் அரசின் தொலைநோக்குக் கொள்கைகள் ஆகியவை மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன.

    Advertisement

    உற்பத்தி, வாகனங்கள், பொறியியல், ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வளர்ச்சி பெற்று வருகிறது.

    தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    சம்பள உச்சவரம்பு ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019 (முன்பு திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015) இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர .7,000/- எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பைத் தளர்த்தி, அனைத்து 'C' மற்றும் 'D' பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2025-26ஆம்

    Advertisement

    ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்:

    1. இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை 6T6OT மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    2. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை от 601 மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    Advertisement
    அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் ஆர்டர்! விஜய்க்கு நெருக்கடி

    3. ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

    Advertisement

    5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    தேனி ஜெயில் பிரேக்.. சீவலப்பேரி பாண்டி தப்பித்த கதை தெரியுமா? ஆட்டம் காணும் தமிழக சட்டம்-ஒழுங்கு?

    6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்.

    இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400/- மற்றும் அதிகபட்சம் ரூ.16,800/- வரை பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்கு 367 கோடியே 20 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

    Advertisement

    அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்." எனக் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu announces up to 20% bonus for eligible public sector employees, with payouts ranging from ₹8,400 to ₹16,800 ahead of Diwali.