ரெக்கமண்டேஷனுக்கு வேலையே இல்லை.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த ஆர்டர்! தகிக்கும் தலைமைச் செயலகம்!

  • சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் தங்களது பதவி உயர்வுm பணி மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் சிபாரிசை பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

    Advertisement

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் இயக்குநர் ராஜசேகர் அனைத்துத் துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் அதிரடியாக அனுப்பியுள்ளது அரசு ஊழியர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

    Advertisement

    அதில்," வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியைப் (Proper Official Channel) பின்பற்றாமல் மாண்புமிகு அமைச்சர்களின் அலுவலகங்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் முதலமைச்சரின் முகவரிப் பிரிவு (CM Cell) ஆகியோரிடம் நேரடியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

    வீட்டை மாற்றும் விஜய்..வெற்றி இல்லமாக மாறும் பாமணி இல்லம்? பரபரப்பாக நடக்கும் பணிகள்.. சிஎம் விசிட்?
    Advertisement

    தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள், 1973(Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973) 18-681 14. (Rule 18 - Canvassing of non-official or other outside influence): 18. Canvassing of non-official or other outside influence No Government servant shall bring or attempt to bring any political or other outside influence to bear upon any superior authority to further his interests in respect of matters pertaining to his service under the Government.

    Advertisement
    "அந்த" தென்னிந்திய கட்சிக்கு மோடி அமைச்சரவையில் இடம் கன்பார்ம்.. பெரிய மாற்றம் வரப்போகுதாம்!

    "எந்தவொரு அரசுப் பணியாளரும், தங்களின் சேவை தொடர்பான விஷயங்களில் (Service matters) தங்களுக்குச் சாதகமான ஆணைகளைப் பெறுவதற்காகவோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்காகவோ, எவ்வித வெளிச் செல்வாக்கையோ (outside influence), அரசியல் செல்வாக்கையோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளையோ கொண்டுவரவோ அல்லது கொண்டுவர முயற்சிக்கவோ கூடாது.

    முதல்வர் விஜய்யின் தனி செயலர் லட்சுமி பிரியாவுக்கு கூடுதல் பொறுப்பு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மேலும், தமிழ்நாடு அரசுபணியாளர் நடத்தை விதிகள்1973இன் விதி 20ன் படி, "அரசு பணியாளர்கள் தங்கள் குறைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, உரிய அதிகார்ப்பூர்வ வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் மேலும், அரசின் நற்பெயர், கண்ணியம் அல்லது நலனுக்கு பாதகமாக இருக்கும் எந்த அறிக்கையையும் அல்லது தொடர்பையும் வழங்கக் கூடாது."

    Advertisement

    மேற்கண்ட விதிகளை மீறிச் செயல்படுவது நடத்தை விதிமீறலாகக் (Breach of Conduct Rules) கருதப்பட்டு அப்பணியாளர்/அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே, இதன் மூலம் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பின்வருமாறு அறிவுறுத்தப்படுகிறது:

    1. இனிவரும் காலங்களில், அலுவலர்கள்/பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான எந்தவொரு கோரிக்கை அல்லது குறைகளுக்கும் தங்களது அலுவலகத் தலைவர் /துறைத் தலைமை வழியாக உரிய நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே(Through Proper Official Channel) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

    2. துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி அல்லது உரிய வழியைப் பின்பற்றாமல் நேரடியாக மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முதலமைச்சரின் முகவரி போன்ற உயர் அமைப்புகளுக்கு மனு அனுப்புவதோ அல்லது வெளிச் செல்வாக்குகளைப் பயன்படுத்த முயற்சிப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    Advertisement

    3. இந்த அறிவுறுத்தலையும் தாண்டி, எவரேனும் இவ்வாறு அலுவலகத் தலைவர் /துறைத்தலைவர் வழியாக அல்லாமல் நேரடியாக மனுக்கள் சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்/பணியாளர் நடத்தை விதி 18-ஐ மீறியதாகக் கருதப்பட்டு அவர் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் (TNCS (D&A) Rules) உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    அனைத்து அலுவலகத் தலைவர்களும் இச்சுற்றறிக்கையினைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, அதற்கான ஒப்புதலினைப் பெற்றுப் பராமரிக்குமாறு மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu’s Employment and Training Department warns government staff of disciplinary action for bypassing official channels to seek transfers, promotions or personal benefits.