ஜஸ்ட் மிஸ்.. நூலிழையில் தப்பிய 30 உயிர்கள்! வெற்றிப் பயணத் திட்ட பேருந்தில் திடீர் தீ விபத்து! ஷாக்!

  • சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட விடியல் பேருந்து பயணத் திட்டம், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் வெற்றி பயணித்திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தரமற்ற பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஆங்காங்கே அவை பழுதாகி நிற்பதாகவும் புகார் அளிந்துள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் அருகே வெற்றி பயண திட்டத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் ரயில்வே பாலம் அருகே பேருந்து திடீரென கொளுந்து விட்டு எரிந்து நிலையில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

    Advertisement

    திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று விடியல் இலவச பேருந்து பயண திட்டம். நாளொன்றுக்கு அரசு பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த பேருந்து பயண திட்டம் மூலமாக கட்டணமில்லாமல் பயணம் செய்து வந்தனர்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், இந்த பேருந்து பயணத்திட்டம் வெற்றி பயணம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் மாநகர் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    "ஸ்டாப்புல பஸ்ஸே நிக்குறதுல்ல! எதுக்கு மேடம் வெற்றிப் பயண திட்டம்?" கீர்த்தனாவை அலறவிட்ட பெண் பயணி

    இதன் மூலம் ஒரு நாளைக்கு 684 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என சொல்லப்பட்டுள்ள நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். அதே நேரத்தில் இந்த பயணத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பேருந்துகள் தரமின்றி இருப்பதாகவும் அடிக்கடி பழுதாகி நிற்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூரில் இயக்கப்பட்ட வெற்றி பயண திட்ட பேருந்து திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement
    Dummy முதலமைச்சர்.. பஞ்ச் டயலாக் சிஎம்? ஆந்திராவுக்கு பறந்தது இதற்காக தானா? விட்டு விளாசிய உதயநிதி!

    திருச்செந்தூரிலிருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி வெற்றி பயணம் அரசு பேருந்து 30 பயணிகளுடன் இன்று மாலை சுமார் 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தென்காசியைச் சேர்ந்த தவசிமுத்து என்பவர் ஓட்டி வந்தார். இதில் நடத்துனராக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாரிகணேஷ் என்பவர் இருந்துள்ளார். பேருந்து குரும்பூர் ரயில்வே பாலம் அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் ஸ்டீயரிங் அருகே திடீரென புகை வெளியேறியுள்ளது.

    வாங்குறதே 35 ரூபாய்க்கா? எவ்வளவு பில் போட போறீங்க? எங்க தலையில தான் விழும்! சிஎம் விஜய்க்கு கண்டனம்!
    Advertisement

    இதைக் கவனித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி, அதில் பயணம் செய்த 30 பயணிகளையும் விரைவாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக இறங்கியுள்ளனர். சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக பேருந்து தீப்பற்றி எரிந்த நிலையில், இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பேருந்தில் இருந்த 30 பயணிகளும் உயிர் தப்பினர். குரும்பூர் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்கனவே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்தப் பகுதியில் ஒருவழிப்பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டன.

    Advertisement

    இந்நிலையில், நடுரோட்டில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வீரமாணிக்கம் குளம் வழியாக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓடும் அரசு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A government bus operating under the Vetri Payanam scheme caught fire near Kurumbur railway bridge, but all 30 passengers escaped safely.