சென்னை: மற்றுமொரு டெண்டரை ரத்து செய்து அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தவெக அரசு/ மாமல்லபுரத்தில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவனத்துக்கு புதிய வளாகம் அமைக்க திமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டிருந்தது. தேர்தல் நடப்பதற்கு முன்பே இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு எல்-1 நிறுவனமும் இறுதி செய்யப்பட்டு இருந்தது/ இந்த நிலையில் திடீரென இந்த டெண்டரை ரத்து செய்துள்ளது தமிழக வெற்றி கழக அரசு.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை ரத்து செய்து வருகிறது. மேலும் நகர்புற, ஊரக கட்டமைப்புகளுக்காக போடப்பட்ட திட்டங்கள், டெண்டர்கள் மற்றும் அவற்றின் உத்தேச நிதி ஒதுக்கீடுகளையும் மறு ஆய்வு செய்து வருவதோடு, பல திட்டங்களையும் ரத்து செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட 7 மாவட்டங்களில் தனியார் பங்களிப்புடன் சாலையோர வசதி மையங்களை அமைக்க கோரப்பட்டு இருந்த டெண்டரை தமிழக வெற்றிக்கழக அரசு ரத்து செய்திருந்தது.இந்த நிலையில் அடுத்த அதிரடியாக இன்னும் ஒரு டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை அருகே மாமல்லபுரத்தில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவனத்திற்கான புதிய வளாகம் அமைக்க திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டு இருந்தது. தேர்தலுக்கு முன்பே ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், அது இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. 1981இல் தான் தமிழக நகர்ப்புறம் திட்டமிடல் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழக சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் செயல்பாட்டை மேம்படுத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தான் இந்த நகர்ப்புற திட்டமிடல் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஆய்வு படிப்புகளையும் இந்த நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதற்கான பயிற்சி மையம் கோவையில் செயல்பட்டு வரும் நிலை சென்னை மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான டெண்டரைத் தான் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக வெற்றிக்கழக அரசு சொல்லியுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாக சொல்லி இருக்கும் நிலையில், இதுவரை ஏராளமான டெண்டர்களை தமிழக வெற்றிக்கழக அரசு ரத்து செய்துள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லை என 21 நெடுஞ்சாலை துறை டென்டர்கள், நிர்வாக சீரமைப்பு காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் பத்துக்கு மேற்பட்ட டெண்டர்கள், மே 13 முதல் மே 22 க்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு துறைகளில் விடப்பட்ட 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் வரிசையில் தற்போது மாமல்லபுரம் நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவன வளாகத் திட்டத்திற்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகின் மிகப்பெரிய சிவலிங்கம்.. மகாபலிபுரத்தில் செதுக்கப்பட்ட லிங்கம் பீகாரில் நிறுவப்பட்டது!