தமிழக அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் புகார் தந்தால் ரூ.1 லட்சம் வெகுமதியா.. உண்மையான தகவல் இதுதான்

  • சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் 1000 ரூபாய் லஞ்சம் பெற்றால் புகார் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மற்றும் அதிகாரப்பூர்வமற்ற போலிச் செய்தியாகும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயரில் இதுபோன்ற எந்தவொரு சன்மானத் திட்டத்தையும் தமிழக அரசு தற்போது வரை அறிவிக்கவில்லை என்பதை பொதுமக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

    Advertisement

    தவெக தன்னுடைய பிரச்சாரத்தில், "லஞ்சம் இல்லாமல் அனைவருக்கும் அரசு திட்டங்களை கொண்டு செல்ல, ஆதார் கார்டு போல், தமிழ்நாடு சிட்டிசன் கார்டு கொடுக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தை பற்றியும் அதில் தரவுகள் இருக்கும். பிறப்பில் இருந்தே அனைவருக்கும் திட்ட பலன்கள் போய் சேரும்.

    Advertisement

    இதற்கு விண்ணப்பிக்க தேவையில்லை, லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவையில்லை. வீட்டு வாசலுக்கே திட்டங்கள் வந்து சேரும். இது, ஸ்டாலின் சார் விடும் கதை போல் இல்லை. அறிவியல்பூர்வமாக சாத்தியமாக்குவோம்" என்று உறுதி கூறியிருந்தனர்.

    தமிழக அரசு அதிரடி

    அதன்படியே, தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும் இதே வாக்குறுதியை தந்துள்ளனர்.. முதல் முறையாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுமே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..

    அப்போது, "தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. போதை பொருளை விற்றாலும் வாங்கினாலும் குண்டர் சட்டம் பாயும். முதலமைச்சர் விஜய் "மக்கள் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    இன்னும் 3 மாசத்துக்குள் அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளார். சட்ட விரோத மதுக்கடைகள் அகற்றப்படும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்போது வீடியோ எடுத்துக்கொள்ள வேண்டும், தன் பெயரை சொல்லி தவெக கட்சியினர் யாரும் அரசு அலுவலகங்களில் தலையிட கூடாது" என்றெல்லாம் கூறியிருந்தது பெருத்த கவனத்தை பெற்றிருந்தது.

    லஞ்சத்துக்கு எதிராக தவெக அரசு

    சுருக்கமாக சொல்லப்போனால் 108 தொகுதிகளில் வென்று புதிய அரசை அமைத்துள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் லஞ்சத்தை வேரோடு ஒழிக்க போவதாக அதிரடி சபதம் எடுத்துள்ளது.. இதற்காக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகத் தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் இப்போது வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளதாம்.

    Advertisement

    மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொடமாட்டேன் என்று உறுதியளித்துள்ள முதல்வர் விஜய், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    லஞ்சம் புகாரளித்தால் 1 லட்சம் சன்மானம்

    இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு தற்போது ஒரு அதிரடியான புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.. எந்தவொரு அரசு துறையாக இருந்தாலும், உங்களிடம் வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட பொதுமக்கள் ஆதாரத்துடன் தாராளமாக புகார் தெரிவிக்கலாம்.

    அப்படி லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை பற்றி சரியான ஆதாரத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிப்பவர்களுக்கு அரசு சார்பாக 100000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. லஞ்சம் வாங்குபவர்களை பிடிக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அதிரடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது..

    Advertisement

    பொதுமக்கள் தங்களின் புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக 1800 425 1555 என்ற கட்டணமில்லா டோல் ஃப்ரீ எண்ணையும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.. இந்த நம்பருக்கு எப்போது வேண்டுமானாலும் போன் செய்து பொதுமக்கள் தங்கள் புகாரை பதிவு செய்ய முடியும்.. தவெக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமானிய மக்கள் மற்றும் ஏழை எளியோரிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    வியப்பில் பொது மக்கள்

    அதே நேரத்தில், இந்த அதிரடி திட்டத்தால் ஆபீசுகளில் லஞ்சம் வாங்கி பழகிய அரசு ஊழியர்கள் இடையே பெரும் கலக்கமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது..

    Advertisement

    முதலமைச்சர் விஜய் தானே ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போல உரிய நேரத்திற்கு தினமும் தலைமைச் செயலக அலுவலகம் வந்து பணியாற்றி வருவது ஒட்டுமொத்த அதிகாரிகள் மத்தியிலும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும்நிலையில், லஞ்சத்தை ஒழிக்க அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. இதனால் அடிமட்ட அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!

    1000 ரூபாய் லஞ்சம் பெற்றால் 1 லட்சம் சன்மானம்

    இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாகவே ஒரு செய்தி இணையத்தில் சுற்றி கொண்டிருக்கிறது.. எந்தவொரு அரசு துறையாக இருந்தாலும், உங்களிடம் வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட பொதுமக்கள் ஆதாரத்துடன் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். அப்படி லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை பற்றி சரியான ஆதாரத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிப்பவர்களுக்கு அரசு சார்பாக 100000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்

    பொதுமக்கள் தங்களின் புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக 1800 425 1555 என்ற கட்டணமில்லா டோல் ஃபிரீ எண்ணையும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.. இந்த நம்பருக்கு எப்போது வேண்டுமானாலும் போன் செய்து பொதுமக்கள் தங்கள் புகாரை பதிவு செய்ய முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலியான தகவல்

    1800 425 1555 என்பது லஞ்ச ஒழிப்புத் துறையின் புகார் எண் என்பது உண்மைதான் என்றாலும், அதில் புகார் அளிப்பவர்களுக்குப் பணம் வழங்கப்படும் என்பது முற்றிலும் பொய்யான தகவலாகும்.. இத்தகைய வதந்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்..

    அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால், அது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பதைத் தவிர, புகார்தாரருக்கு அரசு எந்தவொரு நிதி வெகுமதியையும் வழங்குவதில்லை.. சமூக வலைதளங்களில் வரும் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்திகளை உண்மை என்று நம்பி பரப்புவது சட்டப்படி தவறு என்பதையும், இத்தகைய செயல்கள் குழப்பத்தையே விளைவிக்கும் என்பதையும் பொதுமக்கள் உணர வேண்டும்..

    சமூக வலைதளங்களில் வரும் இது போன்ற கவர்ச்சிகரமான செய்திகளை மற்றவர்களுக்குப் பகிரும் முன், அவை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்..

    English Summary

    Tamil Nadu Govt Announces Rs 1 Lakh Reward for Bribe Complaints Against Employees