சென்னை: 8வது ஊதிய குழு குறித்து இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் இருக்கும் அரசு ஊழியர்களும் இந்த ஊதிய குழுவின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காரணம் மத்திய அரசின் ஊதிய விகிதத்தை வைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 8வது ஊதிய குழுவை அமைதிப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
சுமார் 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதிய குழுவின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.
அதற்காக ஊதியக்குழு அமைக்கப்பட்டு அவர்களது பரிந்துரையின் பெயரில் ஊதிய உயர்வு குறித்து அறிவிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு அமல்படுத்தும் ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சில மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 8வது ஊதிய குழுவை அமைத்திருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த குழு மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியது. இதில் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் அமைப்புகள், ரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் தேதி நடந்த இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் ஊதிய முரண்பாடுகள், அகவிலைப்படி குறித்த கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து ஒன்பதாம் தேதி புதுச்சேரியில் இந்த குழு ஆலோசனை கூட்டம் நடத்தியது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின் படி சுமார் 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு துறையை தவிர்த்து பார்க்கும் போது இது சுமார் 33 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓய்வூதியதாரர்களும் இதில் அடங்குவர். இந்த நிலையில் மதிய அரசின் ஓய்வூதிய குழு விரைவில் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தான் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 8வது ஊதிய குழுவை அமல்படுத்துவது தொடர்பாக பரிசிலனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.