வெளி மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை.. மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு

  • சென்னை: தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்டவற்றை வெளி மாநிலங்கள் கொண்டு செல்ல தடை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    கடந்த ஜூலை 27 ஆம் தேதி விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    வெளிமாநிலம் எடுத்து செல்ல தடை

    தமிழகத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு டன் கணக்கில் கனிமவளங்கள் எடுத்து செல்லப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பல ஆயிரம் டன் கற்கள் வெளி மாநிலங்களுக்கு முறைகேடாக எடுத்து செல்லப்படுவதாகவும், இதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து, புதிதாக அமைந்த தவெக அரசு, தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்து செல்ல தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த ஜூலை மாதம் இதற்கான உத்தரவை தவெக அரசு பிறப்பித்தது. மூன்று மாதத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தடை இன்றுடன் முடிவுக்கு வர இருந்தது.

    Advertisement
    வெளி மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை.. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு

    மேலும் 3 மாதங்களுக்கு தடை

    இந்த நிலையில், கனிம வளங்கள் எடுத்து செல்வதற்கான தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கனிம வளங்கள் எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள அரசு கடிதம் எழுதியிருந்தது.

    தென் மாநில முதல்வர் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த கேரள முதல்வர் விடி சதீஷன், விஜய்யை சந்தித்து நேரில் கோரிக்கையும் விடுத்து இருந்தார். இருந்த போதிலும், கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கான தடையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. புதுவை, காரைக்காலுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu government has issued an order extending the ban on the transportation of mineral resources from Tamil Nadu to other states. The government has announced that the prohibition on moving items such as stones, gravel, and M-sand to other states will remain in effect.