சென்னை: தமிழ்நாடு அரசின் கீழ் பணி புரியும் பல்வேறு நிறுவனங்களின் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்கள் மற்றும் கடன் உள்ளிட்டவை குறித்து தகவல்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது/ 2025 ஆம் ஆண்டு சொத்து விவரங்களை அரசு ஊழியர்கள் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் தங்களுக்கு சொந்தமான அசைவம் மற்றும் அசையா சொத்துக்கள் கடன்கள் உள்ளிட்ட விவரங்களை ஆண்டுதோறும் அரசியல் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தமிழக அரசின் ஐஎஃப்எச்ஆர்எம்எஸ் (IFHRMS) எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட இணையதளம் மூலமாக ஆன்லைனில் இந்த விவரங்களை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதிகள் 1973 விதி 7(3)ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தந்தன்படி அரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்து விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் காலண்டர் ஆண்டுக்கான சொத்து விவரங்களை அடுத்த ஆண்டு மார்ச் 33 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் கடன் விவரங்களை 2026 அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என முதலில் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஐஎஃப்எச்ஆர்எம்எஸ் (IFHRMS) இணைய தளத்தில் சொத்து விவரங்களைப் பதிவேற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்த அரசு, தற்போது மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி, அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த காலக்கெடு, தற்போது டிசம்பர் 31, 2026 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய காலக்கெடுவுக்குள் சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களைத் தவறாமல் சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை 2025ஆம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை ஐஎஃப்எச்ஆர்எம்எஸ் (IFHRMS) இணையதளத்தில் தாக்கல் செய்யாத அரசு ஊழியர்கள், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள கூடுதல் இரண்டு மாத கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தககது.தமிழ்நாடு அரசு ஊழியர்கள்
பெண்களுக்கு ஜாக்பாட்.. வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு!
ஐஎஃப்எச்ஆர்எம்எஸ்
DA Hike: தீபாவளி பரிசு! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! விஜய் அதிரடி
புதிய காலக்கெடு
கூடுதல் அவகாசம்