சென்னை: தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC(M), MBC & DNC, SC, ST) ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும். குரூப் 1 தேர்வுக்கு: பொதுப்பிரிவினருக்கு 32ல் இருந்து 37 வயதாக உயர்த்தப்படுகிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37ல் இருந்து 42 ஆக உயர்த்தப்படுகிறது. இதுவே மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 42ல் இருந்து 47 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47ல் இருந்து 52 ஆகவும் உயர்த்தப்படுகிறது. குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுக்கு: பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 வயதாகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல குரூப் 4 தேர்வுக்கும் 3 பிரிவுகளில் தனித்தனியாக வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு உயர்கல்வி தகுதி உடையோருக்கு: பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 வயதாக உயர்த்தப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. குரூப் 4 தேர்வு உயர்கல்வி தகுதி இல்லாதோருக்கு (BC, BCM, MBC, DNC): பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 ஆகவும் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 32ல் இருந்து 37 ஆகவும் மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42ல் இருந்து 47 ஆகவும் உயர்த்தப்படுகிறது. பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 ஆகவும் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35ல் இருந்து 40 ஆகவும் இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த உத்தரவு மூலம் வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.யாருக்கெல்லாம் வயது வரம்பு உயர்வு?
Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோடு செய்வது எப்படி?
குரூப் 2 தேர்வு.. ஒரு இடத்துக்கு 579 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
குரூப் 4 தேர்வு எஸ்சி, எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு:
மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.