வெளிச்சந்தையில் 17000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்.. 5வது டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

  • சென்னை: தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிச்சந்தையில் 17000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 5வது டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழ்நாட்டின் மின்சார தேவைக்கும் உற்பத்திக்கும் இடைவெளியாக அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிச்சந்தைகளில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஐந்தாவது டெண்டரை மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்திற்கு 17000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் ஜனவரி மாதம் 2000 மெகாவாட், பிப்ரவரி மாதம் 3000 மெகாவாட், மார்ச் மாதம் 3000 மெகாவாட், ஏப்ரல் மாதம் 3500 மெகாவாட், மே மாதம் 2500 மெகாவாட் மின்சாரம், ஜூன் மாதம் 2500 மெகாவாட் என மொத்தம் 17000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் ஆனது கோரப்பட்டுள்ளது.

    Advertisement

    முன்னதாக வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நான்கு டெண்டர்களானது கோரப்பட்டது. அந்த டெண்டர்களில் ஒரு டெண்டருக்கு மட்டும் தான் அந்த விலையை ஒப்புக்கொண்டு மின்சாரம் வாங்கியது. மீதமுள்ள 3 டெண்டர்கள் அதிக விலை புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது . தற்போது ஐந்தாவது டெண்டரானது கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வரும் 13ம் தேதி திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் என்ன விலை பதிவு செய்யப்படுகிறது என்பதையும், அதனை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா என்பது குறித்தும் அன்று தான் தெரியவரும். மேலும் மின்சாரத்தின் விலை மற்றும் முழு விவரங்கள் அன்று தான் தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மின்வாரியம் லாபம்

    தமிழக மின் வாரியத்தின் மின் பகிர்மான கழகத்தின் மொத்த வருவாய், 2025 - 26ல், 1.02 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்த செலவு, 1 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டில் மின் பகிர்மான கழகம் 1,526 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிலையில், மின் கொள்முதலுக்கு மட்டும், 72,348 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2025-26ம் ஆண்டு அறிக்கையின் படி, மின் கட்டணம் வசூல், தமிழக அரசின் மானியம் போன்றவற்றின் வாயிலாக, ஒரு லட்சத்து 2,036.50 கோடி ரூபாயை மொத்த வருவாய் மின்வாரியத்திற்கு வந்துள்ளது. மொத்த செலவு, 97 ஆயிரத்து 977 கோடி ரூபாய். லாபமாக, 4,059 கோடி ரூபாய் ஆகும். இதில் பணியாளர்களின் வருங்கால பயன்களுக்காக, 2,533 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    English Summary

    The Government of Tamil Nadu has issued its 5th tender for the procurement of 17,000 megawatts of electricity from the open market to meet the state's power requirements.