பம்பையை மூழ்கடித்த வெள்ளம்.. சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசு கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்!

  • சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே சபரிமலை செல்ல திட்டமிட்டிருக்கும் தமிழக பக்தர்கள் தங்கள் பயணங்களை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    சபரிமலையில் பம்பை ஆற்றை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. ஏற்கெனவே தரிசனத்திற்காக சபரிமலை சென்றிருக்கும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில்தான் தமிழக பக்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    கேரளாவில் வெள்ளம்

    கடந்த வெள்ளிக்கிழமை லேசாக தூறல் இருந்தது. இப்படித்தான் மழை தொடங்கியது. நேற்று கனமழை கொட்டி தீர்த்ததில் ரன்னி நகரம் முழுவதும் வெள்ளம் சூழந்திருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு இவ்வளவு பெரிய மழைய நாங்கள் பார்த்தது கிடையாது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பம்பை ஆற்றின் கரையோரம் இருக்கும் வீடுகள், கடைகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

    கடந்த 2018ல் இதேபோன்று மழை பெய்தபோது.. ஆற்றில் வெள்ளத்தின் அளவு மெதுவாகத்தான் அதிகரித்தது. எனவே உடமைகளை எடுத்தக்கொண்டு வெளியேற கால அவகாசம் இருந்தது. ஆனால், இந்த முறை வெள்ளம் திடீரென அதிகரித்தது. கடைகளின் ஷெட்டர்களை கூட சரியாக பூட்ட முடியாமல் அப்பகுதி மக்கள் வெளியேறினர். ஓணம் பண்டிகை வியாபாரம் தொடங்கும் நேரத்தில் இப்படி வெள்ளம் அனைத்தையும் சீரழித்துவிட்டது என்று மக்கள் புலம்புகின்றனர்.

    Advertisement

    ரன்னி நகரத்தில் மாமுக்கு, புலிமுக்கு பகுதிகளில் பாலம் நீரில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலை வனப்பகுதியில் 300 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. 204 மி.மீக்கு மேல் மழை பதிவானால் ரெட் அலர்ட் கொடுப்பார்கள். ஆனால் 300 மி.மீ என்பது ஹெவி ரெட் அலர்ட் எச்சரிக்கைக்கு சமமாகும்.

    சபரிமலை மட்டுமல்லாது கேரளா முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மொத்தம் 65 முகாம்கள் அமைக்கப்பட்டு 1500க்கும் அதிகமானவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பின்னணியில்தான் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    English Summary

    Sabarimala: The Southwest Monsoon has intensified in Kerala. A warning for extremely heavy rainfall has been issued for all districts except Thiruvananthapuram and Kollam. Consequently, devotees from Tamil Nadu planning to visit Sabarimala are advised to reconsider their travel plans.