திருந்திட்டாங்க.. அரசு அலுவலகங்களில் தீபாவளி ’பரிசு’ வாங்க மாட்டாங்களாம்! கொடுக்கவும் மாட்டாங்களாம்!

  • சென்னை: தமிழக முழுவதும் தற்போது ஒரு செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை நாங்கள் தீபாவளி அன்பளிப்பு பெற மாட்டோம்.. யாருக்கும் தரமாட்டோம் எனவும் விளம்பரம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    விஜய் ஆட்சி அமைந்த பிறகு இந்த மாற்றம் நேர்மைக்கான சான்று என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் விர்ச்சுவல் வாரியர்ஸ். உண்மையில் பெரும் காண்ட்ராக்டர்கள், சட்டவிரோத தொழில் செய்பவர்களிடம் மொத்தமாக பணத்தை வாங்கிக் கொள்ளும் அதிகாரிகள் பிறருக்கு கொடுத்தால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்கின்றனர் நம்மிடம் பேசிய ஒப்பந்ததாரர்கள்..

    Advertisement

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்கள் , சார்பதிவாளர் அலுவலகங்கள், நகராட்சி நிர்வாக துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கட்டு கட்டாக பணத்தை வாங்கி சிக்கியவர்கள் தற்போது ஜி-பே மூலம் லஞ்சம் பெற்று கைதாகி வருகின்றனர். மக்கள் பணத்தை தொட மாட்டோம்.. தொடவும் விடமாட்டோம்.. தொட்டவர்களையும் விட மாட்டோம் என முதல்வர் விஜய் சூழுரைத்த நிலையில் சமீபத்தில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு தரப்பினரிடம் மீட்டிங் நடத்தியுள்ளது.

    Advertisement

    வணிகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், குவாரி உரிமையாளர்கள், கனிம வள லாரி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசி யாருக்கும் தீபாவளி பரிசோ, பொருளோ, பணமோ தர வேண்டாம். அவ்வாறு யாராவது கேட்டால் எங்களுடன் புகார் செய்யுங்கள் என சொல்லி உள்ளார்களாம். மேலும் மாவட்ட ஆட்சியர்களும், பல்வேறு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு யாரிடமும் பணம் கேட்கக் கூடாது.. பணம் கேட்பவர்களுக்கும் தரக்கூடாது, இனிப்பு பட்டாசு பெட்டி கூட தரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்களாம்.

    இதனால் பெரிய மாற்றம் நிகழ்ந்து விட்டதாக கொண்டாடி வருகின்றனர் விர்ச்சுவல் வாரியர்ஸ். மேலும் தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் "தீபாவளி என்பது அன்பை பெறுவது.. அன்பை கொடுப்பது.. எனவே அன்பளிப்பு வாங்க மாட்டோம்.. அன்பளிப்பும் கொடுக்க மாட்டோம் என ஆங்காங்கே திடீர் அறிவிப்பு போஸ்டர்களும் முளைத்து உள்ள நிலையில் நல்லது நடந்து விட்டது என உற்சாகத்தில் கொண்டாடினர் பொதுமக்கள்.

    Advertisement

    ஆனால் அங்கு தான் ஒரு ட்விஸ்ட்டே! வழக்கம் போல அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. முதலில் மிரட்டி கேட்பார்கள் இப்போது கொடுத்தால் கொடுங்கள் என்கிறார்கள். கொடுக்காவிட்டால் வேலை நடப்பதில்லை. எனவே வேறு வழியின்றி லஞ்சம் கொடுக்கும் நிலை தான் இருக்கிறது என புலம்புகின்றனர் மக்கள்.

    மேலும் அரசு ஒப்பந்ததாரர்கள், குவாரி உரிமையாளர்களிடம் வழக்கம்போல வசூல் வேட்டையை தொடங்கி விட்டார்களாம் உயரதிகாரிகள். லாட்டரி விற்பவர்களிடம் 1கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார்கள். மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம், கு வாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி மொத்தமாக வசூல் செய்து என்னிடம் கொடுத்து விடுங்கள் என சொல்லுகிறார்கள்.

    Advertisement

    பிறகு ஏன் கீழ்நிலை ஊழியர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்படவில்லை என கேட்டதற்கு, "அவர்களுக்கு கொடுத்தால் நாங்கள் வாங்கியது தெரிந்துவிடும்.. அதனால் நேர்மையாக இருப்பது போல காட்டிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என ஒப்பந்ததாரர்களிடம் கூறி இருக்கிறார்கள்.

    உயர் அதிகாரிகள் தொடங்கி கீழ்நிலை ஊழியர்கள் வரை படு ஜோராக வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் வழக்கம்போல எங்களை தொடர்பு கொண்டு பணம் கேட்டு தான் வருகிறார்கள். ஆனால் லஞ்சமே இல்லை என வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள். அதிகாரிகள் மட்டுமல்ல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் பல இடங்களில் எங்கள் தரப்பை தொடர்பு கொண்டு பணம் கேட்டு தான் வருகிறார்கள். நாங்களும் வேறு வழியின்றி கொடுத்து வருகிறோம் என புலம்புகின்றனர்.

    English Summary

    Government offices announce a Diwali gift ban, but contractors and traders allege continued bribery and large-scale collections by officials.